Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

Oppo Reno 10 Series: நீங்க எதிர்பார்த்த அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்த Oppo Reno 10 தொடர்..!

Gowthami Subramani Updated:
Oppo Reno 10 Series: நீங்க எதிர்பார்த்த அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்த Oppo Reno 10 தொடர்..!Representative Image.

வரும் மே மாதம் 24 ஆம் தேதி, Oppo Reno 10 சீரிஸ் ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த Oppo Reno 10 Series-ல் Reno 10, Reno 10 Pro, Reno 10 Pro Plus போன்றவை ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ரெனோ 10 தொடர் இந்தியாவில் ரெனோ 8 வரிசைக்குப் பின் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் Oppo மொபைல் ஆனது, ரெனோ வரிசையில் இரண்டு மாடல்களை மட்டும் அறிமுகப்படுத்தும். ஆனால், இந்த முறை ரெனோ வரிசையில் மூன்று மாடல்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த மொபைல் ஆனது, இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் OPPO Reno 10 Series

Oppo Reno 10 சீரிஸ் ஆனது, இந்தியாவில் ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் அறிமுகமாக உள்ளது. இருந்தபோதிலும், இதில் சில கலர்கள் இந்தியாவில் கிடைக்காமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது.

Oppo Reno 10 Pro Plus அம்சங்கள்

தற்போது, OPPO தனது Oppo Reno 10 Pro Plus மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

  • Oppo Reno 10 Pro+ மொபைல் ஆனது செல்ஃபி ஷூட்டருக்கு ஏற்றவாறு சென்டர் பொசிஷனுடன், செய்யப்பட்ட விளிம்புகளுடன் கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
  • மேலும், மொபைலின் மேற்புறத்தில் Speaker Grille மற்றும் சத்தத்தைக் குறைப்பதற்கு Microphone வசதியையும் கொண்டுள்ளது.
  • இதன் வலது பக்கத்தில் Volume adjust மற்றும் Power Buttons-ஐக் கொண்டுள்ளது.
  • Oppo Reno 10 Pro+ மொபைலின் கீழ்ப்புறத்தில் USB Type-C Port, Sim Card Tray, Mic போன்றவை உள்ளன.
  • கேமராவைப் பொறுத்த வரை பின்புற அல்லது ரியர் கேமரா ஆனது, 50MP + 8MP + 64MP அளவிலான மெகாபிக்சல் அளவைக் கொண்டுள்ளது.
  • இது போன்று, முன்பக்க அல்லது செல்ஃபி கேமரா 32MP அளவைக் கொண்டுள்ளது.
  • பேட்டரி திறன் ஆனது, 4700 mAh அளவில் இருக்கும்.
  • டிஸ்பிளேயைப் பொறுத்த வரை, 6.74 இன்ச் அளவு அதாவது 17.12செ.மீ
  • மெமரியைப் பொறுத்த வரை, 16 GB RAM / 256 GB Internal Storage-ஐக் கொண்டுள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க அம்சங்களைக் கொண்ட இந்த மொபைல் ஆனது, ரூ.58,990-க்கு விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்