Oppo Reno 9 5G Price in India: ஒப்போ நிறுவனம் தங்களின் அடுத்த சீரிஸான Oppo Reno 9 மாடல்களை வெளியிடுவதற்கான வேலை பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அறிமுகத்திற்கு முன்பே Oppo reno 9 மாடலைப் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது.
ஒரு டிப்ஸ்டர் இந்த தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து, மக்களின் கவனத்தை இந்த ஸ்மார்ட்போன் அதிகம் ஈர்த்துள்ளது. Oppo Reno 9 மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 8 மூலம் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதில் யுனிவர்சல் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார். ஒப்போ ரெனோ 9 சீரிஸில் - Oppo Reno 9 மற்றும் Oppo Reno 9 pro ஆகிய இரண்டு மாடல்களும் இடம் பெறலாம்.
சரி இதில் இருக்கும் அம்சங்களைப் பற்றி பார்க்கும் போது, ஒப்போ ரெனோ 9 குவால்காம் ஸ்னாப்டிராகன் 9 சீரிஸ் அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 8 மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒப்போ ரெனோ 8 போன்றே இந்த மாடல் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் இதில் ஒரு சிலவற்றை மேம்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் UFCS (யுனிவர்சல் ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம்) ஆதரவுடன் கூடிய 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
ரெனோ 8 சீரிஸ் 32 மெகாபிக்சல் சோனி IMX709 செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. அதே செல்ஃபி ஸ்னாப்பர் Reno 9 இல் கிடைக்கும். இதன் பின்புற ஷெல் 64-மெகாபிக்சல் OmniVision OV64B பிரதான கேமராவைக் கொண்டிருக்கும். மேலும் இது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படலாம். இப்போதெய்க்கு இவ்ளோ தான், மற்ற விரிவான தகவல் இன்னும் வெளியாக வில்லை. அனால் ரெனோ 9 சீரிஸ் மேம்படுத்தப்பட்ட ரெனோ 8 சீரிஸாக தான் இருக்கலாம்.
ஒப்போ ரெனோ 8 மாடலானது 6.43 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 90Hz புதுப்பிப்பு வீதம், 180Hz டச் மாதிரி வீதத டிஸ்ப்ளே மற்றும் 1,080x2,400 தீர்மானத்துடன் வந்துள்ளது. பின்புறத்தில் 64 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. எது எல்லாத்துக்கும் அடுத்த வெர்ஸனாக இருக்கும் ஒப்போ ரெனோ 9 சீரிஸ்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…