Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் மாஸ் என்ட்ரீ.. | Realme 10 Pro Coca Cola Phone

Nandhinipriya Ganeshan Updated:
கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் மாஸ் என்ட்ரீ.. | Realme 10 Pro Coca Cola Phone Representative Image.

கடந்த சில நாட்களாகவே பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், அது கோலா போன் என்ற பிராண்டின் கீழ் அறிமுகமாகும் என்றும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. கோகோ கோலா ஸ்மார்ட்போன் தொழிலுக்குள் இறங்கவிட்டதா என்று இந்திய மொபைல் சந்தையில் பரவலாக பேசப்பட்டும் வந்தது. இந்தநிலையில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Realme நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, கோகோ கோலா ஸ்மார்ட்போன் தொழிலுக்குள் இறங்கவில்லை, மாறாக ரியல்மி நிறுவனம் தான் கோகோ கோலாவை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் கீழ் ஒரு ஸ்பெஷல் எடிஷனாக அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 

கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் மாஸ் என்ட்ரீ.. | Realme 10 Pro Coca Cola Phone Representative Image

முதலில் ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் எடிஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ரியல்மி 10 ப்ரோ 5ஜி [Realme 10 Pro 5G] ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனாக களமிறங்கவுள்ளது. அந்தவகையில், வருகின்ற பிப்ரவரி 10, 2023 அன்று இந்தியாவில் Realme 10 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக Realme நிறுவனம் அறிவித்துள்ளது. 

கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் மாஸ் என்ட்ரீ.. | Realme 10 Pro Coca Cola Phone Representative Image

Realme 10 Pro 5ஜி -ன் சிறப்பம்சங்கள்:

கோகோ கோலா நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷான இருப்பதால், கண்டிப்பாக கோகோ கோலா ஸ்பெஷல் வால்பேப்பர்ஸ், தீம்கள் அல்லது ரிங்டோன்கள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், பேக் பேனலில் கோகோ கோலா பிராண்டிங்கை வெளிப்படுத்தும் விதமாக டிசைன் இடம்பெறும்.  

அதுமட்டுமல்லாமல், Realme 10 Pro 5ஜி Snapdragon 695 SoC மூலம் இயக்கப்படுகிறது, 6GB/8GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. 6.72-இன்ச் முழு HD+ ஐபிஎஸ் 120 ஹெர்ட்ஸ் பேனலைக் கொண்டுள்ளது. ஃபோன் பின்புறத்தில் 108MP Samsung ISOCELL HM6 முதன்மை சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைப் பெற்றிருக்கும்.

கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் மாஸ் என்ட்ரீ.. | Realme 10 Pro Coca Cola Phone Representative Image

முன்பக்க செல்ஃபி கேமரா இரண்டு சாதனங்களிலும் ஒரே மாதிரியாக உள்ளது. ஃபோனின் பேட்டரி 33W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 mAh அளவில் உள்ளது. Realme 10 Pro 5G அடிப்படை மாடலின் விலை ரூ. 18,999, மேலும் சிறப்பு பதிப்பு மாடலின் விலை இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்