Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அட்டகாசமான வடிவத்துடன் விரைவில் வெளிவர உள்ள ரியல்மி 11 ப்ரோ பிளஸ்..! விலை எவ்வளவு தெரியுமா.? | Realme 11 Pro Plus Price and Specs

Gowthami Subramani Updated:
அட்டகாசமான வடிவத்துடன் விரைவில் வெளிவர உள்ள ரியல்மி 11 ப்ரோ பிளஸ்..! விலை எவ்வளவு தெரியுமா.? | Realme 11 Pro Plus Price and SpecsRepresentative Image.

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 11 பிளஸ் தொடரை மே 9 ஆம் தேதி சீனாவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரியல்மியின் இந்த தொடரில் Realme 11 Pro மற்றும் Realme 11 Pro Plus என்ற இரண்டு மாடல்கள் உள்ளன. இதில், மே 9 ஆம் தேதி வெளியாக உள்ள Realme 11 Pro Plus தொடருக்கான வடிவமைப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரி மற்றும் அதன் நீடிக்கும் தன்மை பயனாளர்களின் செயல்பாட்டு அனுபவத்தை மேம்படுத்துகிறது.

Realme 11 Pro Plus சிறப்பம்சங்கள்

டிஸ்பிளேயைப் பொறுத்த வரை, இந்த ரியல்மி மொபைல் ஆனது, 1080 * 2412 பிக்சல் அளவைக் கொண்டு 6.7 இன்ச் அமோல்டு டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்த வரை, பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 200 மெகாபிக்சல் முதன்மை லென்ஸையும், 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸை உள்ளடக்கியுள்ளது. மேலும், LED Flash, ISO Control, Exposure Compensation, Digital Zoom மற்றும் Touch to Focus போன்றவற்றைக் கொண்டுள்ளது. முன் பக்க கேமரா ஆனது 32 மெகாபிக்சல் அளவைக் கொண்டுள்ளது.

ரியல்மி 11 ப்ரோவின் தொடர் ஆனது MediaTek Dimensity 1200 MT6893 சிப்செட்டைக் கொண்டுள்ளது. மேலும், இது டூயல் கோர்டெக்ஸ் A78 மற்றும் ஒற்றைக் கோர்டெக்ஸ் A55 அமைப்பைக் கொண்டுள்ள Octo-core செயலியால் ஆனது. மேலும், இதன் Mali-G77 MC9 GPU மற்றும் 8GB RAM கேம் பிரியர்களுக்கு ஏற்றவாறு அமைகிறது. இது 128GB இன்டர்னல் சேமிப்பைக் கொண்டுள்ளது. இவை அனைத்திலும், இதன் வடிவமைப்பு அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக அமைகிறது.

Realme 11 pro plus விலையானது ரூ.34,990 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்