ரியல்மி நிறுவனத்தின் பெயரில் நார்சோ ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது நிறுவனம் இந்த பெயரில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ரியல்மி நார்சோ 60 ஸ்மார்ட்போன் இந்திய சந்தைகளில் விரைவில் காட்சிப்படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில், போனில் கிடைக்கும் அதிரடி அம்சங்கள் குறித்த சிலத் தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி போனின் டிஸ்ப்ளே 61 டிகிரி கர்வேச்சர் திறனைப் பெறும் என்று நிறுவனத்தின் விளம்பர யுக்திகள் மூலம் தெரிகின்றன. இதுமட்டும் இல்லாமல், முதல் முறையாக 2 லட்சத்து 50ஆயிரம் புகைப்படங்களை சேமிக்க முடியும் எனவும் ரியல்மி தெரிவித்துள்ளது. நார்சோ 60 ஜூலை மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், இந்தியாவுக்கு எனப் பிரத்யேகமாக 1டிபி ஸ்டோரேஜ், அதாவது 1000ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்டுவரப்படும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், இது நார்சோ 60 சீரிஸ் ஸ்மார்ட்போனில் எந்த மாடலுக்கு பொருந்தும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், நார்சோ 60 ப்ரோ மாடலில் இந்த வசதி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 11 ப்ரோ மொபைலின் மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பாகும். நெருங்கும் மழை காலத்தில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு, புதிய நார்சோ போன் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ரியல்மி 11 ப்ரோ மொபைலின் அம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…