Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
0.00sensex(0.00%)
நிஃப்டி22,147.90
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண எப்படி புக் செய்வது | How to Book Tickets for Republic Day Parade 2023

Priyanka Hochumin Updated:
குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண எப்படி புக் செய்வது | How to Book Tickets for Republic Day Parade 2023Representative Image.

எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு முற்றிலும் தனித்துவமாக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு நாம் 74வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளோம். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண விரும்பும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக இந்த பதிவில் பாப்போம்.

குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண எப்படி புக் செய்வது | How to Book Tickets for Republic Day Parade 2023Representative Image

டெக்னாலஜி வளந்து வரும் காலகட்டத்தில் இருப்பதால் அனைத்துமே இப்போது ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, வரும் ஜனவரி 26, 2023 நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டங்களை நேரில் பார்த்து ரசித்திடம் ஆன்லைனில் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை படிப்படியாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும் மத்திய அரசு பொது மக்களுக்காக சுமார் 32,000 டிக்கெட்டுகளை ஓதிக்கியுள்ளது. அவை ரூ.20 முதல் ரூ.500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண எப்படி புக் செய்வது | How to Book Tickets for Republic Day Parade 2023Representative Image

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் www.aamantran.mod.gov.in உங்களின் போன் நம்பரை உள்ளிட்டு sign-in செய்யவும். அப்படி இல்லாமல் முதல் முறையாக பயன்படுத்துகிறீர்கள் என்றால் sign-up செய்யவும்.

பின்பு அங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான தரவுகளை உள்ளிடவும்.

உங்கள் போனுக்கு வந்த OTP-ஐ டைப் செய்து உள்ளே செல்லவும்.

குடியரசு தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அவற்றுள் நீங்கள் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்துகொள்ளவும்.

அதன் பின்னர் இன்னும் எத்தனை டிக்கெட் இருக்கிறது, விலை ஆகிய விவரங்கள் திரையில் வரும். உங்களுக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்துக்கொள்ளவும்.

ஒரு அக்கவுண்டை பயன்படுத்தி 10 டிக்கெட் வரை வாங்கலாம்.

பிறகு அவரவர்களின் அடையாளங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அது ஆதார் கார்டு, அடையாள அட்டை, லைசென்ஸ் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றுள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்க பதிவேற்றம் செய்ய போகும் பைல் 1MB-க்குள் இருக்க வேண்டும் மற்றும் புகைப்படமானது .png or.jpg பார்மெட்டில் இருக்க வேண்டும்.

இறுதியாக தொகையை செலுத்தி பதிவு செய்துகொள்ளுங்கள். நீங்கள் நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று உங்களின் போனில் இருக்கும் QR கோட் ஸ்கேன் செய்து சரிபார்க்கப்படும்.

மேலும் குடியரசு தினத்தில் பங்கேற்க பதிவு செய்த டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்க ஃபிரீ டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்