நம்மகிட்ட இருக்குற ஸ்மார்ட்போனில் நிறைய விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு தேவையானது வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா மட்டும் தான். அது இருந்தா போதும் மத்தது எதுக்கு என்று தான் நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா இந்த செட்டிங்ஸ்ல இருக்குற அம்சங்கள் நமக்கும் போனுக்கும் அவ்ளோ நன்மைகள் தரும். அதில் ஒன்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அப்படி ஒன்னு இருக்கா?
அது பேர் தான் ஆட்டோ ஆப்டிமைஷேஷன் (Auto-Optimization). இந்த மோட்-ஐ ஒரு முறை எனேபிள் (enable) செய்துவிட்டு அப்புறம் பாருங்க. உங்க போன் பேட்டரி, டாட்டா பயன்பாடுன்னு அவ்ளோ சேமித்து தரும். இது எல்லா போன்லையும் இருக்குமா? என்று கேட்டால், இல்லை. சாம்சங் பிராண்ட் அதன் கேலக்சி மாடலில் போனின், செயல்திறனை மேம்படுத்த நிறைய உள்ளமைக்கப்பட்ட தேர்வுமுறை அம்சங்களை வழங்குகிறது. அதுல ஒன்னு தான் ஆட்டோ ஆப்டிமைஷேஷன் - இது சாம்சங் ஸ்மார்ட்போனின் பேட்டரி, ஸ்டோரேஜ், மெமரி மற்றும் செக்யூரிட்டி ஸ்டேட்டஸ் போன்றவைகளை சில நொடிகளில் சரிபார்க்கும்.
எப்படி enable பண்றது?
முதல்ல சாம்சங் போனில் செட்டிங்ஸ்-ஐ திறக்கவும்.
பிறகு பேட்டரி அண்ட் கேர் (Battery and Care) என்ற ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளவும்.
இப்ப அங்க இருக்கும் three vertical dots கிளிக் செய்யுங்கள்.
அடுத்து ஆட்டோமேஷன் (Automation) என்பதை செலக்ட் செய்யவும்.
தினமும் ஆட்டோ ஆப்டிமைஷேஷன் செய்ய....
ஆட்டோ ஆப்டிமைசேஷன் அட்டவணையை சரிசெய்ய, ஆட்டோ ஆப்டமைஸ் டெய்லி (Auto optimise daily) என்பதை தேர்வு செய்யுங்கள்.
அதில் டைம் (time) என்பதை கிளிக் செய்து எப்போதெல்லாம் ஆட்டோ ஆப்டிமைஸ் இயக்கபட வேண்டும் என்று டைம் செட் செய்து டன் (done) என்று கொடுங்கள்.
மேலும் ஸ்டோரேஜ் அதிகரிக்க பேக்கிரவுண்ட் ஆப்களையும் 'க்ளோஸ்' செய்ய க்ளோஸ் ஆப்ஸ் (Close Apps) என்பதற்கு அடுத்துள்ள சுவிட்சை கிளிக் செய்யவும்.
இப்ப வேணாம்னா...
இப்ப நமக்கு இந்த ஆப்டிமைஷேசன் தேவையில்லை ஆஃப் செய்யலாம் என்று நினைத்தால், ஸ்க்ரீனின் மேற்புறத்தில் உள்ள சுவிட்சை கிளிக் செய்யவும். இது மிகவும் ஈஸியா யூஸ் ஆகும் அம்சம், என்பதால் பயன்படுத்தி பாருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…