Samsung நிறுவனம் 2023 ஜனவரி லான்ச் செய்ய உள்ள முதல் போன் Samsung F04 ஆகும். மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய Samsung நிறுவனம் அறிமுகம் செய்த மாடல் Samsung F04 ஆகும். மிக குறைந்த விலையில் கிடைக்கும் F Series மொபைலில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் என்ன... இதன் பேட்டரி பேக் அப் எவ்வளவு, கேமரா, விலை, என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.
ஜனவரி 12 2023 முதல் Samsung F04 விற்பனைக்கு வரும் என Samsung நிறுவனம் அறிவித்து இருந்தது. Samsung என்றாலே நமக்கு ஞாபகம் வருவது இதன் லாங் டேர்ம் பயன்பாடு தான். தரமான மொபைல் சரியான விலையில் அளிக்கும் Samsung மொபைல் மீது வாடிக்கையாளருக்கு எப்போதும் தனி நம்பிக்கை உண்டு.
இரண்டு கலர் வேரியண்டில் கிடைக்கும் Samsung F04 மொபைல் போன் 8 GB RAM கொண்டது ஆகும். 8 GB RAM மொபைல் இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது வாடிக்கையாளருக்கு ஜாக்பாட் ஆகும். இதில் இருக்கும் இன்னொரு ஸ்பெஷலான அம்சம் 1TB ஸ்டோரேஜ் கொண்ட MediaTek P35 processor பொருத்தி உள்ளது.
பட்ஜெட் ஃபிரண்டிலியாக இருப்பதால் கேமராவில் 13mp + 2Mp டூயல் ரியர் கேமரா மற்றும் 5MP செல்வி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற லேட்டஸ் போனைக்காட்டிலும் குறைந்த ஸ்பெஷிஃபிகேஷன் கொண்டு இருந்தாலும் பட்ஜெட் விலையில் பர்ஃபாமன்ஸில் காம்பரமைஸ் ஆகவில்லை.
டிசைனிங் சைடில் HD டிஸ்பிளே இருப்பது நமக்கு நல்ல பிச்சர் குவாலிட்டி அளிக்கிறது. அதிக நேரம் பேட்டரி பேக் அளிக்கும் 5000 mAh பேட்டரி மற்றும் 15W charger அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரும் போனில் கொடுக்காத எக்ஸ்ட்ரனல் மெமரி கார்டு ஆப்சன் இந்த போனில் இருப்பது வரவேற்கப்படுவது ஆகும். அறிமுக தள்ளுபடியாக Samsung F04 7499 ரூபாய்க்கு ஜனவரி 12 2023 முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…