Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

உலகின் 8வது அதிசயம் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்..

Vaishnavi Subramani Updated:
உலகின் 8வது அதிசயம் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்.. Representative Image.

எண்ணெய் வளமிக்க நாடு ஆனா சவூதி ஆரேபியாவில் புதிதாக ஒரு கண்ணாடி நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. சுமார் 170 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நகரம் NEOM என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நகரம் ஒரு கார்பன் இல்லாத நகரமாக கட்டமைக்கப்படவுள்ளது. இந்த நகரத்தை விண்வெளியில் இருந்து பார்த்தால் ஒரு நீண்ட கோடு போன்ற அமைப்பாக இருக்கும். அதனால் தான் அதற்கு “The Line” என பெயரிட்டுள்ளனார்.

உலகின் 8வது அதிசயம் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்.. Representative Image

NEOM:

✤ NEOM என்றால் முதலில் உள்ள மூன்று வார்த்தைகளை சேர்த்தால் neo-இதனின் ஆரேப்பிக் அர்த்தம் “new” “புதிய” மற்றும் கடைசி “M” இதனின் ஆரேப்பிக் அர்த்தம் “Future” “எதிர்காலம்”. NEOM முழு ஆர்த்தம் ”புதிய எதிர்காலம்” உருவாக்குவதே சவூதி ஆரேபியாவின் திட்டம்.

✤ பணக்கார நாடுகளில் ஒன்றான சவூதி ஆரேபியாவில் NEOM இந்த திட்டம் கட்டமைத்து முடிப்பதற்கு சுமார் 500 பில்லியன் டாலர் செலவாகும் என கணித்துள்ளனார்.

✤ இந்த திட்டம் 2030 முடிக்க வேண்டும் என அந்த நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளர்.  இந்த திட்டம் அவரது கனவுகளில் ஒன்று.  இந்த திட்டம் நிறைவடைந்தால் அது ஒரு புதிய உலக அதிசயங்களில் ஒன்றாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

உலகின் 8வது அதிசயம் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்.. Representative Image

கண்ணாடி கோடு (Mirror Line):

✤ இந்த கண்ணாடி கோடு கட்டமைப்பு ஆரம்பத்தில் தொடங்கி 170 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 200 மீட்டர் அகலம் கொண்டு முடிவடையும். இந்த “மிரர் லைன்” ஆனது செங்குத்து அமைப்பாகவும், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.

✤ இந்த கண்ணாடி நகரத்தில் 9 மில்லியன் மக்கள் வசிக்கும் வசதிகள் கொண்ட அமைப்பாக கட்டமைக்கப்படவுள்ளது.  மக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் வேலை பொழுதுபோக்கு வசதிகள், விளையாட்டு இடம் என்று பல வசதிகள் செய்யப்பட உள்ளது.

✤ இந்த கண்ணாடி நகரத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் பார்பதற்கு மற்றும் பயன்படுத்துவதற்கு நடைபயணத்தில் ஐந்து நிமிடத்தில் செல்லலாம். கட்ட அமைப்பின் அடித் தளத்தில் அதிவேக இரயில் கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது.  இந்த சேவையில மூலம் இந்த கண்ணாடி நகரத்தை ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையை அடைவதற்கு 20 நிமிடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

உலகின் 8வது அதிசயம் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்.. Representative Image

செங்குத்து கட்டமைப்புத் திட்டம்:

✤ இந்த கண்ணாடி நகரத்தின் கட்டிட்ட அமைப்பை அமெரிக்க கட்டுமான நிறுவனமான “Maphosisi Architects” என்ற நிறுவனம் டிசைன் வடிவமைத்துள்ளது.

✤ இந்த கட்டிட்ட அமைப்பு வடமேற்கு சவுதி ஆரேபியாவில் அகபா வளைகுடா கடற்கரையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நமது இயற்கை பகுதி மையத்தில் அமைந்துள்ளது.

✤ இது கடலோர பாலைவனம், மற்றும் மலைப்பகுதிகளின் வழியாக மேல் பள்ளத்தாக்கு  நிலப்பகுதியில் வழியாக செல்லவதால் இந்த கட்டிட்ட அமைப்பானது ஒரு தனித்துவமான அமைப்பாக அமையும்.

உலகின் 8வது அதிசயம் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்.. Representative Image

கண்ணாடி நகரத்தின் வசதிகள் மற்றும் விவசாயம்:

✤ இந்த கண்ணாடி நகரத்தில் முழுவதுமாக கண்ணாடியாக வடிவமைப்பதால் அது விவசாயம் செய்வதற்கு எதுவாக அமையாது என்பதை கருத்தில் கொண்டு செங்குத்து விவசாயம் செய்வதாக அறிக்கை கூறிப்பிட்டுள்ளது.

✤ இந்த கண்ணாடி நகரத்தில் முதல் தளத்தில் மக்கள் நடந்து செல்லவதற்கு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு வசதிகள், பொழுபோக்கு வசதிகள் என பல வசதிகள் செய்ய உள்ளன. இரண்டாம் தளத்தில் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்கள் கட்டமைக்க உள்ளது.

உலகின் 8வது அதிசயம் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்.. Representative Image

✤ இந்த கட்டமைப்புகளை செய்வதற்கு ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ்(artificial intelligence) பயன்படுத்த உள்ளது.

✤ இந்த நகரில் எந்த வாகன அமைப்புகள் வசதிகள் இல்லை.  நடந்து செல்வதும் மற்றும் அதிவேக ரயில் சேவை மட்டும் தான் உள்ளது. இதனால் மாசு இல்லாத,  நகரம் மற்றும் கார்பன் இல்லாத நகரம் ஆகும்.

✤ இந்த  எல்லா வசதிகளையும் பயன்படுத்துவதற்கு பணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும். இந்த நகரத்தில் இத்தனை வசதிகள் மற்றும் இயற்கை வளம் குறையாமால் இருப்பதால் இந்த நகரம் பல நாடுகளுக்கு முன்மாதிரி ஆகவும்,  உலக அதிசங்களில் ஒன்றாகவும், இருக்க வாய்ப்புள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்