Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

சோனி வெளியிட்ட அறிவிப்பால்...கேம் பிரியர்களுக்கு ஷாக்...PS5 விலை அதிகரிப்பு!

Priyanka Hochumin November 07, 2022 & 11:15 [IST]
சோனி வெளியிட்ட அறிவிப்பால்...கேம் பிரியர்களுக்கு ஷாக்...PS5 விலை அதிகரிப்பு!Representative Image.

சோனி நிறுவனத்தின் பிஎஸ்5 சீரிஸ் கன்சோல்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்5 ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 49,990 என்றும் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் புளூ-ரே டிரைவ் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் எடிஷனில் இந்த டிரைவ் வழங்கப்படவில்லை. இருப்பினும் எக்ஸ்பாக்ஸ் போன்று இல்லாமல், பிஎஸ்5 இரண்டு வேரியண்ட்களின் ஹார்டுவேர் அம்சங்களும் சமமாகவே வழங்கப்பட்டு உள்ளன. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் கேம்களை சிடிக்களில் இருந்து லோட் செய்ய முடியும். இரு கன்சோல்களுடன் பல்வேறு கேமிங் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

சோனி வெளியிட்ட அறிவிப்பால்...கேம் பிரியர்களுக்கு ஷாக்...PS5 விலை அதிகரிப்பு!Representative Image

பிளே ஸ்டேஷன் ஹெச்டி கேமரா ரூ. 5,190 விலையிலும், பல்ஸ் 3டி வயர்லெஸ் ஹெட்செட் ரூ. 8,590 விலையில் கிடைக்கிறது. இதேபோன்று பிளே ஸ்டேஷன் மீடியா ரிமோட் ரூ. 5,990 என்றும் டூயல் சென்ஸ் சார்ஜிங் ஸ்டேஷன் கன்ட்ரோலர்கள் ரூ. 2,590 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்படி பிஎஸ்5 சீரிஸின் விலையை சோனி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த கேமிங் கன்சோல் வெளியாகி இதுவரை அதிக யூனிட்கள் விற்கப்பட்டதால், புது உச்சத்தை எட்டியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோனி வெளியிட்ட அறிவிப்பால்...கேம் பிரியர்களுக்கு ஷாக்...PS5 விலை அதிகரிப்பு!Representative Image

இதுவரை சோனியின் PS5 மாடல் 25 மில்லியனுக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சோனி தெரிவித்துள்ளது. 2022 நிதியாண்டில் மட்டும் 18 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகும் என சோனி நிறுவனம் கணித்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 3.3 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த நிதியாண்டின் அரையாண்டு வரையில் சோனி நிறுவனம் 5.7 மில்லியன் PS5 யூனிட்களையே விற்பனை செய்து இருக்கிறது. இப்படியே போனால் மீதமுள்ள காலாண்டில் விற்பனை இலக்கை எட்டுமா என்று கேள்வி எழும்புகிறது.

சோனி வெளியிட்ட அறிவிப்பால்...கேம் பிரியர்களுக்கு ஷாக்...PS5 விலை அதிகரிப்பு!Representative Image

ஆனால் இப்போது சோனி நிறுவனம் தங்களின் பிஎஸ்5 சீரிஸின் விலையை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி இந்தியாவில் வாங்கும் பிஎஸ்5 சீரிஸின் விலை இது தான். பிஎஸ்5 ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 54,990 என்றும் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை அதிகரிப்பு வரும் நவம்பர் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Also Read: 850GB டேட்டா மற்றும்...FIFA உலகக்கோப்பை கால்பந்தை பார்க்க...Vi கொண்டு வந்த புதிய பிளான்கள்!

Tag: Ps5 Price In India | Ps5 Price | Ps5 Release Date | Ps5 India | Ps5 Price In India Amazon | Ps5 Price Chennai | Ps5 Release Date In India | Ps5 Price In India Flipkart | Ps5 Price In India Sony | Ps5 Price In India 2022 | Ps5 Price In India 1tb | Ps5 Price In Usa | Ps5 Price In Dubai | PS5 விலை உயர்வு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்