Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,247.91
304.23sensex(0.42%)
நிஃப்டி22,266.95
119.05sensex(0.54%)
USD
81.57
Exclusive

155 ரூபாய் கட்டினா.. 76 சேனல் பார்க்கலாம்...! அதுவும் எத்தனை நாட்களுக்கு தெரியுமா..?

Manoj Krishnamoorthi Updated:
155 ரூபாய் கட்டினா.. 76 சேனல் பார்க்கலாம்...! அதுவும் எத்தனை நாட்களுக்கு தெரியுமா..?Representative Image.

டிவி என்பது இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அன்றாட பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது. காலை முழுவதும் இரவு வரை டிவி பார்த்தாலும் இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் எனத்தான் தோன்றும். ஏராளமான சேனல்கள் எக்கச்சக்க ரியல்டி ஷோ தொலைக்காட்சியில் உள்ளது. 

தற்போது பல சேனல்கள் வந்தாலும் ஆரம்பத்தில் நாம் அதிகம் பார்த்தது சன் டிவி தான். இன்னும் சொல்லப்போனால் கேபிள் கனேக்‌ஷன் என்பதை விட சன் டிவி கனேக்‌ஷன் என்று தான் சொல்லி வந்திருப்போம். அந்தளவு சன் டிவி தொலைக்காட்சியில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக மாறியுள்ளது. 

இந்த சன் நெட்வோர்க்கின் Sun Direct மூலம் வீட்டில் டிவி கனேக்‌ஷன் வைத்திருப்போர் ஏராளம். நீங்களும் Sun Direct தான் பயன்படுத்துறீங்களா இதோ உங்களுக்கு 2023 பொங்கலில் கம்மி விலையில் அறிமுகப்படுத்திய பிளானை பார்ப்போம். 

155 ரூபாய் கட்டினா.. 76 சேனல் பார்க்கலாம்...! அதுவும் எத்தனை நாட்களுக்கு தெரியுமா..?Representative Image

Sun direct Pongal Offer 2023

மாதாந்திர Sun Direct கட்டணத்தில் பொங்கல் ஆஃப்பராக அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் சிறப்பானதாக உள்ளது. Sun Direct Tamil இல் 155.8 ரூபாய் 1 மாதம் முழுவதும் இயங்கும் பிளான் வந்துள்ளது. இந்த பிளானில் ரீசார்ஜ் செய்தால்  மொத்தம் 76 சேனல்களை 1 மாதம் முழுவதும் எந்த தங்குதடை இல்லாமல் பார்க்க முடியும். 25 பிரபலமான சேனல், 19 தெலுங்கு சேனல், 12 குட்டிஸ் சேனல் என மொத்தம் 76 சேனல் இந்த பிளானில் அடங்கும். 

அதேபோல தெலுங்கு வாடிக்கையாளர்களும் 178.81 ரூபாய்க்கு 1 மாதம் வேலிடிட்டி கொண்ட பிளானை Sun Direct Telugu கொடுக்கப்பட்டு உள்ளது. 1 மாதம் வேலிடிட்டி கொண்ட இதில் 19 தமிழ் சேனல், 25 பிரபலமான சேனல், 12 குட்டிஸ் சேனல், 10 நியூஸ் சேனல்  என மொத்தம் 76 சேனல் அளிக்கப்படும். 

இந்த 2023 பொங்கல் சமயத்தில் Sun Direct நிறுவனம் கொடுத்துள்ள அசத்தலான ஆஃப்பர் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை டமாக்கா தான். 3 மாதத்திற்கு 400 ரூபாய்க்கு 48 சேனல் உடன் கிடைக்கும் திட்டத்தை விட இந்த சிறப்பு சலுகை பயனாளர்க்கு போனாசாக இருக்கும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்