தொலைவில் இருப்பவர்களிடம் தகவல் தெரிவிக்க சிரமமாக இருப்பதால் தான் போன் என்ற ஒன்றை கண்டுபிடித்தனர். பின்னர் அதில் பல விஷயங்களை புதுப்பித்தால் இன்று வேற லெவலில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் ஒரு நிமிடம் கூட மொபைல் போன் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் நன்மைகள் பல இருந்தாலும் பல தீமைகள் இருப்பதையும் நம்மால் மறுக்க முடியாது.
நம்முடைய போனுக்கு தெரியாத நம்பர் மூலம் போன் செய்து பேச்சு குடுப்பது போல, போனை ஹேக் செய்து தகவல்களை திருடுவதும், போட்டோக்களை தவறாக பயன்படுத்துவது போன்ற பல சம்பவங்கள் நடப்பதை நாம் கேட்டுள்ளோம். அதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள "TrueCaller" என்னும் செயலி ஒன்று உருவாக்கப்பட்டது. அது நமக்கு தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தால், அது யாருடைய நம்பர் என்ற அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை நமக்கு காண்பிக்கும். எனவே, அதிக மக்கள் இந்த செயலியை தங்கள் மொபைல் போனில் டவுன்லோட் செய்து வைத்துள்ளனர். நாள் பட அதில் இருந்து மக்களின் தரவுகள் திருடப்படுவதாக தகவல் வெளியானது.
இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது ஒரு செய்தி வந்துள்ளது. தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை பெயருடன் காண்பிக்க வேண்டும் என தொலைபேசி நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அமைப்பு புதிய விதிமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பயனர்களிடம் இருந்து பெரும் KYC தரவுகளின் அடிப்படையில், இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…