Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வச்சாங்க பாரு ஆப்பு...எலான் மஸ்க்கின் புது விதிமுறைகள்...அதிர்ச்சியில் ட்விட்டர் ஊழியர்கள்!

Priyanka Hochumin November 02, 2022 & 17:00 [IST]
வச்சாங்க பாரு ஆப்பு...எலான் மஸ்க்கின் புது விதிமுறைகள்...அதிர்ச்சியில் ட்விட்டர் ஊழியர்கள்!Representative Image.

ட்விட்டரை தன் வசப்படுத்திய எலான் மஸ்க், நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அதனால் ட்விட்டர் ஊழியர்கள், பொது மக்கள் என்று அனைவரும் அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் உள்ளனர்.

மஸ்க் அவர்கள் ட்விட்டரை வாங்குவதற்கு முன்பு, சமூக பிரபலங்கள் அதாவது செலிபிரிட்டிஸ்-களுக்கு மட்டும் ப்ளூ டிக் பயன்பாடு இருப்பது முறையாகாது. நான் ட்விட்டரை வாங்கிய பிறகு சாமானியர்களுக்கும் அந்த அம்சம் தரப்பப்டும் என்று கூறினார். இப்ப என்னடானு பார்த்தா, அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளைக் வைத்திருக்கும் ப்ளூ டிக் பயனாளர்களிடம் மாதம்தோறும் இருந்து மாதம் 19.99 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 1,600 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ந்து போன ஸ்டிபன் கிங் என்ற பிரபல அமெரிக்க நாவலாசிரியர், " ஒரு ப்ளூ டிக்கிற்கு மாதம் $20 அமெரிக்கா டாலர் தர வேண்டுமா? நீங்கள் தான் எனக்கு தர வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்". இதற்கு பதிலளித்த மஸ்க், " அப்ப மாதம் $8 என்றால் ஓகே-வானு" கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து வெளியான தகவல் இனி ட்விட்டர் பயன்படுத்தும் அனைவரும் ப்ளூ டிக் செயல்படுத்தினால் மாதம் $8 அமெரிக்கா டாலர் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்திய மதிப்பீல் 660 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் இது ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் விளம்பரங்கள் பாதியாக குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

இதனை அடுத்து, ட்விட்டரின் தலைமையில் இருக்கும் அனைவரையும் பணி நீக்கம் செய்து, தான் மட்டும் தனி  டைரக்டராக ட்விட்டரை வழிநடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டுமின்றி அடுத்து வெளியான தகவல் ட்விட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது இனி ட்விட்டர் ஊழியர்கள் தினமும் 12 மணி நேரம், வாரத்திற்கு 7 நாட்கள் வேலை செய்ய வேண்டுமாம். மேலும் ஓவர்டைம் சம்பளம், காம்போ ஆஃப், வேலைக்கு உத்திரவாதம் போன்ற எந்த கேள்வியும் கேட்காமல் பணி புரிய வேண்டும் என்று ட்விட்டர் CEO எலான் மஸ்க் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்