Thu ,Jul 18, 2024

சென்செக்ஸ் 80,716.55
51.69sensex(0.06%)
நிஃப்டி24,613.00
26.30sensex(0.11%)
USD
81.57
Exclusive

Apple MacBook Air - M3 சிப்புடன் தயாராகும் 15 இன்ச் மேக்புக் ஏர்!

Abhinesh A.R Updated:
Apple MacBook Air - M3 சிப்புடன் தயாராகும் 15 இன்ச் மேக்புக் ஏர்!Representative Image.

Upcoming Apple Laptop: டெக் ஜாம்பவானான ஆப்பிள் சமீபத்தில் புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்தது. நிறுவனத்தின் முக்கிய நிகழ்வான WWDC 2023-இல் தங்களின் அப்டேடட் கேட்ஜெட்டுகளுடன் மடிக்கணினிகளின் புதிய வகைகள் குறித்து தகவல் வெளியிட்டது. இந்த சூழலில், நிறுவனம் புதிய 15” இன்ச் MacBook Air லேப்டாப்பை M3 சிப்புடன் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மீது அதிக கவனம் செலுத்தி வரும் மேக்ரூமர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிய 15” இன்ச் மேக்புக் ஏர், எம்3 பிராசஸர் கொண்டு உருவாக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு இதன் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் M3 சிப் மூலம் மேலும் மேக் மடிக்கணினிகளை அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. M3 சிப் மூலம் இயக்கப்படும் iMac, 13” இன்ச் MacBook Pro இன் புதிய மாடல்களில் ஆப்பிள் வேலை செய்துவருவதாக கசிந்த தகவல்கள் கூறுகின்றன. இதன் மாதிரிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. புதிய iMac அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும், M1 சிப் பொருத்தப்பட்ட தற்போதைய 2020 மாடலைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் மேக்ரூமர்ஸ் கணித்துள்ளது.

எனினும், M2 பிராசஸர் உடன் வெளியான புதிய மேக்புக் ஏர் சந்தைக்கு இன்னும் வராத நிலையில், புதிய லேப்டாப் குறித்தான செய்தி ஆப்பிள் விரும்பிகளை உற்சாகமடைய செய்துள்ளது. புதிய மேக்புக் ஏர் இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இனி நாங்களும் பணம் வாங்குவோம் - ட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா அதிரடி!

15” இன்ச் மேக்புக் ஏர் விலை விவரம்

  • M2 சிப் கொண்ட 15 இன்ச் மேக்புக் ஏர் இந்தியாவில் ரூ.1,34,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. அந்தவகையில், கல்வி பயிலும் மாணவர்கள் இதனை ரூ.1,24,900 முதல் வாங்க முடியும்.
  • இந்த புதிய மேக்புக் ஏர் மாடல் மிட்நைட், ஸ்டார்லைட், சில்வர், ஸ்பேஸ் கிரே போன்ற வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.
  • இந்தியாவில் உள்ள அதிகாரப்பூர்வ ஆப்பிள் இணையதளத்தில் (apple.com/in/store) M2 சிப்செட் கொண்ட 15-இன்ச் மேக்புக் ஏர் லேப்டாப்பை வாங்கலாம்.
  • ஜூன் 13 முதல் இணையதளம், ஆப்பிள் ஸ்டோர், பிற ஆன்லைன் வர்த்தக இணையதளங்களில் வாங்கக் கிடைக்கும்.

M2 சிப் கொண்ட 15-இன்ச் மேக்புக் ஏர் அம்சங்கள்

  1. M2 சிப்புடன் கூடிய 15-இன்ச் மேக்புக் ஏர், 15.3-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 500 நிட்கள் வரை பிரைட்னஸை வழங்குகிறது. மேலும், பரந்த அளவிலான 1 பில்லியன் வண்ணங்களை ஆதரிக்கிறது.
  2. அதிதிறன் கொண்ட இந்த மடிக்கணினி மெல்லியதாகவும், 11.5 மிமீ மட்டுமே தடிமன் உடன், வெறும் 1.49 கிலோ எடையுடன் உள்ளது.
  3. இதில் MagSafe சார்ஜிங், இரண்டு தண்டர்போல்ட் போர்ட்கள் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
  4. மேக்புக் ஏர் மேம்பட்ட எம்2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது இன்டெல் அடிப்படையிலான மேக்புக் ஏர் உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க 12 மடங்கு வேகமான செயல்திறனை வழங்குகிறது.
  5. இது 8-கோர் CPU மற்றும் 16-கோர் நியூரல் என்ஜினைக் கொண்டுள்ளது.
  6. வீடியோ அழைப்புகளுக்கான உயர்தர 1080p ஃபேஸ்டைம் எச்டி கேமரா இதில் உள்ளது. ஒலித்திறனுக்காக ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மாஸ் ஆதரவுடன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் ஆறு ஸ்பீக்கர் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்