Vivo Y02 நவம்பர் 29 ஆம் தேதி இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் வெளியாக போவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எந்த ஆக்டோ கோர் பிராஸசர் மூலம் இயங்கும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த வார இறுதிக்குள் இந்தியாவில் வெளியாகும் போன்ற பல வதந்திகள் கிளம்புகின்றன. ஆனால் இவற்றுள் எது உண்மை என்று இதுவரை தெரியவில்லை.
இந்தோனேஷியாவில் நவம்பர் 29 அன்று வெளியான Vivo Y02 ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு வரும் என்று பிரபல டிப்ஸ்டர் பராஸ் குக்லானி Mysmartprice மூலம் தெரிவித்தார். இந்த மாடல் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடனே ஒரே ஸ்டோரேஜ் ஆப்ஷனில் தான் இந்தியாவில் அறிமுகம் ஆகுமாம். மேலும் காஸ்மிக் கிரே மற்றும் ஆர்க்கிட் ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாகலாம். இந்த மாடல் வெறும் ரூ. 8,449/-க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேஷியாவில் வெளியான அதே அம்சங்களுடன் தான் இந்தியாவிலும் வரும் என்று பலரும் கூறுகின்றனர். இதில் கண் பாதுகாப்பு அம்சத்துடன் (Eye Protection feature) தாராள பயன்பாட்டிற்கு 6.51-இன்ச் HD+ ஃபுல்வியூ டிஸ்ப்ளே இடம்பெறும். மேலும் 720x1,600 பிக்சல்கள் மற்றும் MediaTek Helio P22 SoC பிராஸசர் கொண்டு வரலாம். இந்த போனின் இந்தோனேஷியா வெர்ஸன் Funtouch OS 12 இன் லேயருடன் Android 12 Go பதிப்பில் இயங்குகிறது. இதனை கொண்டு தான் இந்தியாவிலும் வரும் என்று கூறப்படுகிறது.
இந்த மாடல் 163.99x75.63x8.49 மிமீ மற்றும் சுமார் 186 கிராம் எடை கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் பேக் மற்றும் பிளாட் பிரேம் வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம். இதில் நாம் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்கள் 20:9 விகிதத்துடன் கூடிய வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் சற்று தடிமனான கன்னம் கொண்டது. மேலும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கும் 5000mAh பேட்டரி உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரை - USB Type-C போர்ட், 1TB வரை விரிவாக்க ஆதரவுடன் மைக்ரோSD கார்டு ஸ்லாட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ஒரு ஸ்பீக்கர் அமைப்பு, எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா சென்சார், மற்றும் f/2.2 துளை கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா சென்சார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…