யூடியூப் வீடியோக்களை 4K ரெசல்யூசனில் பார்ப்பதற்கு, பயனாளர்கள் ப்ரீமியத்திற்கு மேம்படுத்தி கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.
யூடியூப், அதன் சில பயனாளர்களிடம் இந்த சோதனையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. வீடியோக்களை 4K தெளிவுத் திறனில் (4K Resolution) காண்பதற்கான இலவச வசதிகளை நீக்கி, பணம் செலுத்த வேண்டிய அம்சமாக மாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் சிலர் 4K விருப்பத்தைக் காட்டும் வகையில், ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டனர். இது பொதுவாக அனைத்து யூடியூப் பயனர்களுக்கும் இலவசம் என்று இருந்தது. அதே போல, TechCrunch முதலில் தெரிவித்தது போல, யூடியூப் ப்ரீமியம் அம்சமாக உள்ளது. இந்த ப்ரீமியம் பயன்படுத்தும் பயனர்கள் விளம்பரமில்லாமல் வீடியோக்களைப் பார்க்கவும், வீடியோக்கள் மற்றும் பாடல்களைப் பதிவிறக்கம் செய்யவும் முடியும். அதன் படி, அமெரிக்காவில் மாதம் ஒன்றுக்கு யூடியூப் ப்ரீமியமைப் பயன்படுத்த $11.99 செலவாகும் என கூறப்பட்டது. இருப்பினும், YouTube இலவச சோதனைகளை அடிக்கடி வழங்கி வருகிறது.
ஆனால், தற்போது YouTube-ன் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் ஆதரவு கணக்கு, அதாவது TeamYouTube, YouTube-ல் 4K விருப்பத்தைப் பற்றி கேட்கக்கூடிய பயனாளர்களுக்குப் பதிலளித்தது. மேலும், TeamYouTube ப்ரீமியம் மற்றும் ப்ரீமியம் அல்லாத பார்வையாளர்களின் அம்சங்களின் விருப்பத் தேர்வுகளை நன்கு அறிவது எங்கள் பரிசோதனையின் ஒரு பகுதியாகத் தெரிகிறது என ட்வீட் செய்துள்ளது.
இதில் கடந்த அக்டோபர் 02, 2022 ஆம் நாள் TeamYouTube அதன் பயனர்களை, யூடியூப் அம்சங்கள் குறித்த எண்ணங்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கூறியது. இதன் மூலம், நிறுவனம் மேம்பாடுகளைச் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது.
யூடியூப்-ல் கொண்டு வரப்படும் இந்த கட்டணத்தால் ப்ரீமியம் பயன்படுத்தாத மக்கள் கவலையில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…