தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டத்திற்கு இணங்க வாட்சப் தனது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை வாட்சப் தளத்தில் தடை செய்த கணக்குகளின் எண்ணிக்கையின் தரவை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி மொத்தம் 23,24,000 கணக்குகள் கடந்த மாதத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில கணக்குகள் மீது புகார் எழுந்ததையடுத்து அவை தடை செய்யப்பட்டன.
இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் வாட்ஸ்அப்பின் கொள்கைகளை கடைபிடிக்கத் தவறியதால் தடை செய்யப்பட்டனர். அக்டோபர் மாதத்தில், தடை செய்யப்பட்ட 23,24,000 வாட்ஸ்அப் கணக்குகளில், 8,11,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடைசெய்யப்பட்டன.
தடைசெய்யப்பட்ட கணக்குகளை வாட்ஸ்அப்பின் குறை தீர்க்கும் வழிமுறைகள் மூலம் இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து பெறப்பட்ட குறைகள் மற்றும் இந்தியாவின் சட்டங்கள் அல்லது வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறும் தடுப்பு மற்றும் கண்டறிதல் என இரண்டு முறைகளில் வாட்சப் புகார்களை இரண்டு முறைகளில் கையாண்டுள்ளது.
அதே சமயம், கடந்த மாதத்தில் பயனர்களிடமிருந்து வெறும் 701 அறிக்கைகள் மட்டுமே பெறப்பட்டன. மேலும் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களில் 34 புகார்களில் மட்டுமே வாட்சப் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புகார்கள் [email protected] என்ற முகவரியில் இந்தியா சார்ந்த குறைதீர்ப்பு அதிகாரிக்கு அனுப்பப்படும். அதிகாரியை தபால் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…