என்னடா WhatsApp-க்கு வந்த புது சோதனை. வாட்ஸ்அப்பின் குளோன் செயலி பயனர்களின் தகவல்களை ரகசியமாக உளவு பார்ப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மால்வேர் ப்ரொடெக்ஷன் மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி ஃபர்ம் (ESET) வெளியிட அறிக்கையின் படி, அச்சுறுத்தல் கண்டறிதல்கள் தொடர்ந்து 9.5% அதிகரித்து வருவதால், அதிக ஆண்ட்ராய்டு தொற்று உள்ள நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இதற்கு முக்கிய காரணமே, "GB WhatsApp" என்னும் மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் குளோன் தான்.
மேலும் கிடைத்த தகவல் என்ன வென்றால், இந்த போலியான வாட்ஸ்அப் செயலிகள் அசல் செயலியை போலவே ஸ்டாண்டர்ட் அம்சங்கள் மற்றும் கூடுதல் நன்மைகளை கொண்டுள்ளது. எந்த வித கண்டறிதலும் இல்லாமல் அந்த ஆப்கள் மால்வேர் பைல் கொண்டு டிவைஸ்களை அணுகுகிறது. மேலும் அவை ஆடியோ மற்றும் வீடியோக்களை ரகசியமாக ரெகார்ட் செய்யவும் முடியும். மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், இப்படி ஒன்று உங்களின் ஸ்மார்ட்போனில் இருக்கிறது என்பது நமக்கு தெரியவே தெரியாது. ஆனால் அந்த மால்வேர் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடப்பதை கண்காணிக்க ஆரம்பித்துவிடும்.
எனவே, வாட்ஸ்அப் அது போன்ற செயலிகளை உபயோகிக்கும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தற்காலிகமாக தடை செய்கிறது. மேலும் அந்த அக்கவுண்ட்கள் தொடர்ந்து அந்த செயலிகளை பயன்படுத்தினால் வாட்ஸ்அப்பை அணுக முடியாத மாறி நிரந்தரமாக தடை செய்யப்போவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை சீனா (53%) மற்றும் இந்தியாவில் (23%) தான் அதிகம் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இதுக்கு என்ன வழி...
கூகுள் பிலே ஸ்டாரில் இருந்து வாட்ஸ்அப்பை டவுன்லோட் செய்து, அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும். மேலும் மூன்றாம் தரப்பு செயலிகள் பயன்படுத்துவதை அடியோடு நிறுத்த வேண்டும்.
உங்களுடைய வாட்ஸ்அப்பில் இருக்கும் தகவல் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கவும். அப்படி மாறி இருந்தால் உடனே அதனை டெலீட் செய்து விடுங்கள்.
ஸ்மார்ட்போனின் செக்யூரிட்டி நிலவரத்தை செக் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட ஆன்டிவைரஸ்களை போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…