Xiaomi 12T Series Launch Date in India: Mi பிரியர்களுக்கு சியோமி நிறுவனம் ஒரு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் Xiaomi 12T Series வரும் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது.
தங்களின் அற்புத படைப்புக்களை மக்களுக்கு தெரிய படுத்த சியோமி நிறுவனம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சியோமி 12 டி சீரிஸில் Xiaomi 12T மற்றும் 12T Pro உள்ளடங்கும். மேலும் இந்த மாதம் தொடக்கத்தில் geekbench வெப்சைட்டில் குளோபல் வேரியண்ட் Xiaomi 12T Pro மாடல் தென்பட்டதாக கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதமாக சியோமி நிறுவனம் லீக் செய்த தகவல் படி, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் மற்றும் சியோமியின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் கண்டு மகிழலாம்.
அவர்கள் வெளியிட்ட டீசரில் "Make moments mega" என்னும் ஸ்லோகன் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை. ஆனால் MySmartPrice அறிக்கையின் படி, Xiaomi 12T Pro ஆனது பின்புறத்தில் மிகப்பெரிய 200MP சென்சார் கொண்டிருக்கும். அதே போல், அதனின் பேஸ் மாடல் 108MP பிரைமரி ரியர் பொருத்தப்பட்ட சென்சார் உடன் வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஹூட்டின் கீழ், Xiaomi 12T Pro ஒரு ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC ஐ பேக் செய்யலாம். அத்துடன் வெண்ணிலா வேரியண்ட் Dimensity 8100 SoC ஐப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மிகமுக்கியமாக 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5000mAh பேட்டரி கொண்டு வரலாம். இதன் மூலம் மொத்த சிஸ்டமும் சக்தி வாய்ந்ததாக செயல்படலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. மேலும் வெளியான போஸ்டரில் இந்த மாடல் lunar silver நிறத்தில் இருப்பதால் அதே கலர் ஆப்ஷன் உடன் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுவரை கிடைத்த தகவல்கள் உண்மையா என்று வெளியாகும் நாள் வரை பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்தடுத்து வரும் அப்டேட் தகவல்களை தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…