Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Xiaomi Mijia Partition Washing Machine: நீங்கள் யாருமே எதிர்பார்க்காத மாறி Xiaomi வாஷிங் மெஷின்! மேல கீழன்னு தனி தனியா துவைக்கலாம்!

Priyanka Hochumin August 22, 2022 & 12:45 [IST]
Xiaomi Mijia Partition Washing Machine: நீங்கள் யாருமே எதிர்பார்க்காத மாறி Xiaomi வாஷிங் மெஷின்! மேல கீழன்னு தனி தனியா துவைக்கலாம்!Representative Image.

Xiaomi Mijia Partition Washing Machine: மக்களே இதுவரை நீங்கள் சியோமியின் ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட்ஸ்களை தான் பார்த்து இருக்கிறீர்கள். இதோ முதன் முறையாக ஸ்மார்டான, கிளாஸியான வாஷிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது. இதனின் முழு விவரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முன்பெல்லாம் நாம் சுறுசுறுப்பாக இருக்க அனைத்து வேலைகளையும் நாமே செய்வோம். சமைப்பது, துணி துவைப்பது, மாவு அரைப்பது என்று அனைத்தையும் நம் கையாலே செய்து முடிப்போம். ஆனால் தொழிநுட்பம் வளர வளர வேலை செய்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிட்டது. அதுவும் பெரிய தலை வழியே தினமும் துணி துவைப்பது தான். அதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது தான் வாஷிங் மெஷின். இதிலும் ஒரு சிக்கல் இருகிறது. குழந்தைகள் துணி, வெள்ளை துணி, லேசான துணி மற்றும் திடமான துணி என்று ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு விதமாக சலவை செய்ய வேண்டியுள்ளது. அப்படி செய்தால் மட்டுமே அந்த துணியின் தரம் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும். இப்படி தினம் தினம் செய்வதற்கு பதிலாக நாம் கையாலையே துவைத்து விடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இனிமே அந்த கவலை இல்லை, அதற்காகவே தான் உருவாக்கப்பட்டது இந்த இயந்திரம்.

மிஜியா பார்ட்டிஷன் மற்றும் ட்ரையிங் மெஷின்

சீனாவின் பிரபல முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சியோமி, மிஜியா பிராண்டின் கீழ் புதிய 15kg பார்ட்டிஷன் ஸ்மார்ட் வாஷிங் மற்றும் ட்ரையிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது. இதில் என்ன புதிதாக இருக்கிறது என்றால், ஒன்றுக்கு மேல் ஒன்றாக சலவை செய்யும் விதத்தில் இரண்டு பகுதிகளை கொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது. மேல் தளம் 5kg சிலிண்டரும், கீழ் தளம் 10kg சிலிண்டர் என்றும் இரண்டு அடுக்குகள் கொண்டு வந்துள்ளது.

மேல எதுக்கு கீழ எதுக்கு

மேல் தளத்தில் மென்மையான துணி, குழந்தை துணி, வெள்ளை துணி போன்ற லேசான துணியையும், கீழ் தளத்தில் நல்ல மொத்தமான படுக்கை விரிப்பு, டெய்லி யூஸ் துணி போன்ற துணிகளையும் தனி தனியே ஒரே மெரத்தில் துவைக்க முடியும். மேலும் கீழ் இருக்கும் சிலிண்டரை 7kg எடை வரை ட்ரையராகவும் பயன்படுத்தலாம்.

3-வே ஸ்பெஷல் ஏஜென்ட் வாஷிங் முறை

இதில் 3-வே ஸ்பெஷல் ஏஜென்ட் முறை கொண்டு துணிகள் துவைக்கப்படுவதால் மென்மையான துணிகளின் தரம் குறையாமல் சூப்பராக சுத்தம் செய்யப்படுகிறது. அதே போல் வாஷரில் 15 நிமிட வேகமான சலவை மற்றும் ஸ்மார்ட் ட்ரையிங் போன்ற பல செட்டிங்ஸ் இருக்கிறது மற்றும் ஐந்து வகையான கிளீனிங் செயல்முறையை வழங்குகிறது. பேஸ்சுரைசேஷன் + UV மற்றும் சில்வர் ஸ்டெரிலைசேஷன் மூலம் நம் துணிகளில் உள்ள 99.99% கிருமி நீக்கத்தை வழங்குகிறது.

என்னது வெயிட் காமிக்குமா?

இதில் இருக்கும் ஸ்மார்ட் டெலிவரி அம்சம், உங்களின் துணிகளை எடை போட்டு அதற்கு ஏற்ற அளவு சோப்பு மற்றும் கண்டிஷனர், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்குகிறது. எனவே துணிகளில் அதிகப்படியான சோப்பு படிந்து துணிகள் வீணாவதை தடுக்கிறது. அதனால் துணிகளின் பயன்பாடு நீண்ட நாட்களுக்கு வரும். இரண்டு சிலிண்டர்களும் டூயல் டைரக்ட் மோட்டார்கள் மூலம் இயக்கப்படுவதால் 48dB குறைந்த சதத்துடன் இயங்குகிறது.

95°C உயர் வெப்பநிலை கிளீனிங்!

இந்த வாஷிங் மெஷின் இன்டெலிஜெண்ட் விண்ட் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் கூடிய BLDC வேரியபில் ஃப்ரிக்வென்சி பேன் மூலம் ட்ரையர் இயங்குவதால் சிறந்த ட்ரையிங் அனுபவத்தையும் நமக்கு கொடுக்கிறது. 95°C உயர் வெப்பநிலை மூலம் இந்த வாஷிங் மெஷினால் செல்ப் கிளீனிங் செய்துகொள்ள முடியும். வாஷிங் மெஷின் மற்றும் ட்ரையர் இரண்டிற்கும் தனித்தனி கட்டுப்பாடுகள் ஸ்மார்ட் டச் டிஸ்பிளே மூலம் வருகிறது.

இது எங்க கிடைக்கும், விலை எவ்ளோ?

இது ஸ்மார்ட் மெஷின் என்பதால் மிஜியா ஆப் மூலமாகவும் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். மேலும் உங்கள் வீட்டில் ஸ்மார்ட் ஹோம் வசதியிருந்தால் சியோ AI ஸ்மார்ட் வாய்ஸ் அலெர்ட் மூலமாக இந்த வாஷிங் மெஷினை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இந்த வாஷிங் மெஷின் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் படுத்தியுள்ளது. மேலும் 5999 யுவான் (US $888) என்ற விலைக்கு விற்கப்படுகிறது. இதுவே இந்திய மதிப்பில் ரூ. 70,870/- ஆகும்.

xiaomi mijia partition washing, xiaomi mijia partition washing and drying machine, xiaomi mijia washing machine, xiaomi mijia washing machine 15kg, xiaomi mijia washing machine 15kg price, xiaomi mijia washing machine 15kg manual, xiaomi mijia washing machine 15kg review.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்