Youtube Channels Removed: 2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை, விதிமுறை மீறலில் ஈடுபட்ட 44 லட்சம் யூ டியூப் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக யூ டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிக அளவிலான சேனல்கள்
பெரும்பாலானோர், ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு முதலில் தேர்ந்தெடுப்பது யூடியூப் தான். யூ டியூப் சேனலைப் பயன்படுத்துவது, எல்லோருக்கும் எளிதானது. அந்த வகையில், கொரோனா கால கட்டத்தில் ஏராளமானோர் யூடியூப் சேனலை உருவாக்கி, பயன்படுத்திக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் வெளிவந்தது (Youtube Channels Banned).
அதன் விளைவாக, ஏராளக்கணக்கானோர் யூடியூப் சேனலை உருவாக்கியிருந்தனர். அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டு மட்டும், கூகுலுக்குச் சொந்தமாக யூடியூப் நிறுவனம், முதல் மூன்று மாதங்களில் ஏராளக்கணக்கான வீடியோவை நீக்கியுள்ளது. உலகளாவிய சமூக வழிகாட்டுதல்களின் அமலாக்க அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தம் 11 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை அகற்றியுள்ளதாகத் தெரிவித்தது.
கிரீம் எல்லாத்தையும் விடுங்க. இந்த ஜூஸ மட்டும் குடிங்க…. சருமம் எப்படி பொலிவா இருக்கும்னு பாருங்க.
அமெரிக்காவிலும் நீக்கம்
இந்தியாவிற்கு அடுத்த படியாக, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா 3,58,134 வீடியோக்களைக் கொண்டுள்ளது. எனவே, இந்த மொத்த எண்ணிக்கையில் 91 சதவீத அளவிலான வீடியோக்கள், யூடியூப் நிறுவனத்தினுடைய சாஃப்ட்வேர் மூலம் கண்டறியப்பட்டு வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது (44 Lakhs Youtube Channels Removed).
இவ்வாறு, அறிக்கையின் படி, மொத்தம் யூடியூப் சேனல்களை நிறுத்திய விவரங்களை வெளியிட்டது இந்த நிறுவனம். அதன் படி, மார்ச் 2022-ல் முடிவடைந்த காலாண்டில், உலகளவில் மட்டும் 44 லட்சம் அளவிலான யூடியூப் சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
யூடியூப் விதிகள்
யூடியூப் சேனலின் அறிவுறுத்தலில் ஒன்றானது, 90 நாள்களுக்குள் யூடியூப் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை மூன்று முறை மீறினால், அந்த சேனல் அகற்றபடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, சேனலில் பதிவிட்டிருந்த வீடியோக்கள் அகற்றப்பட்டதாக அறிவிப்புகள் வெளிவந்தது (Youtube Channel Conditions Tamil).
சேனல்கள் நீக்கப்பட்டதற்கான காரணம்
எந்தவொரு ஆன்லைன் பதிவிலும், முதலில் குறிப்பிட்ட சேனல் அல்லது ஐடி நீக்கப்படுவதற்குக் காரணம், அதில் ஸ்பேம் அல்லது தவறான வீடியோக்களைப் பதிவேற்றுவதாகும். இந்த காரணங்களினாலேயே, பெரும்பாலும் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் அகற்றப்படுவதுடன், சில சமயங்களில் சேனலும் நீக்கப்படுகின்றன (Reasons for Youtube Channels Banned). குழந்தை பாதுகாப்பு மற்றும் வன்முறை உள்ளடக்கம் ஆகியவற்றின் முறையே பதிவேட்டிருந்தவைகளில் மொத்தம் 24.9 சதவீத அளவிலான வீடியோக்கள் அகற்றப்பட்டன. மேலும், தவறான வீடியோக்களின் முறையே 16.9% வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…