Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

இப்படிலாம் செஞ்சாதான் ஜல்லிக்கட்டுக்கு போகமுடியுமாம்!

Udhayakumar January 12, 2022 & 14:33 [IST]
இப்படிலாம் செஞ்சாதான் ஜல்லிக்கட்டுக்கு போகமுடியுமாம்!Representative Image.

வருடந்தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, இந்த முறை கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி மிகவும் பாதுகாப்பாக நடைபெறவுள்ளது. 

கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலும் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியாவது போட்டிருக்கிறார்கள், கொரோனா வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுவார்கள் எனும் நம்பிக்கையில் அரசு இந்த முறை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது.  அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட  இடங்களில் வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். 

அலங்காநல்லூரில் ஜனவரி 16ம் தேதி  ஜல்லிக்கட்டு நடைபெறவிருப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் அது 17ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். 

ஆன்லைன் பதிவு 2022 : வழிமுறைகளும் விதிமுறைகளும்

மாடு பிடி வீரர்களும். மாடு உரிமையாளர்களும், அவர்களது துணைக்கு வந்தவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும். முழுவதும் செலுத்திய சான்றிதழை சமர்ப்பித்து முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். 

ஒருவேளை அப்படி இல்லையென்றால் பிசிஆர் டெஸ்ட் ரிசல்ட்டில் நெகடிவ் வந்திருக்க வேண்டும். அந்த சான்றிதழையும் சமர்ப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். 

மாடு உரிமையாளர் அவருடன் ஒருவரை மட்டுமே துணைக்கு அழைத்து வரவேண்டும். அதுமட்டுமின்றி இருவரும் கட்டாயம் அடையாள அட்டையோடு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு வரவேண்டும். 

50 சதவிகித பார்வையாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்கிற முந்தைய ஆண்டு நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது.  

300 மாடு பிடி வீரர்கள் மட்டுமே களமிறங்க அனுமதிக்கப்படுவார்கள்

மாடு பிடி வீரர்கள் கட்டாயம் 48 மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். அதில் நெகடிவ் என ரிசல்ட் வந்திருந்தால் மட்டுமே களமிறங்க அனுமதிக்கப்படுவர்.

ஆன்லைன் பதிவு தொடக்கம்

ஆன்லைன் மூலம் பதிவு செய்த பின்னரே, மாடு உரிமையாளர்களும், மாடு பிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும். மதுரை மாவட்ட நிர்வாகம் இதற்கான ஆன்லைன் பதிவை ஏற்பாடு செய்துள்ளது. 

பதிவு செய்பவர்கள் அவர்களது பெயர், முகவரி, மொபைல் நம்பர், மாட்டின் அடையாளம் உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும். 

மதுரை மாவட்ட நிர்வாகம் என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்