தங்கம் என்றாலே நம் மனதிற்குள் ஒருவித சந்தோஷம் தான். பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை நம் வாழ்வியலில் ஒரு அங்கமாக தங்கம் உள்ளது. சாமானியன் முதல் சீமான் வரை சேர்க்க நினைக்கும் ஒரு ஆஸ்தியாக பார்க்கப்படுகிறது. ஏன்..? நம் கையில் கொஞ்சம் காசு இருந்தாலே நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்லும் வார்த்தை 'தங்கத்தை வாங்கி வை... பின்னாடி அவசரத்துக்கு உதவும்' என்பது தான். அது நிச்சயம் மறுக்க முடியாத ஒன்றுதான்... ஆனால் விலை உயர்ந்த ஸ்தானத்தில் நாம் பார்க்கும் தங்கம் சாக்கடையில் கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா...? அதுவும் இந்தியாவில் நடக்கிறது. சரி, இது எங்கு நடக்கிறது என்பதை பற்றி அறிய வேண்டுமா....! மேலும் இந்த பதிவை பின்தொடரவும்.
தங்கம் சாக்கடையில் கிடைக்கிறது என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. இங்கு தங்கம் சாக்கடையில் கிடைக்கிறது என்பது தங்கமாக இல்லை. ஒரு சில பரிமாறத்திற்கு பிறகு தங்கமாக நம் கையில் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் சாக்கடையில் தங்கம் கிடைப்பது என்பது ஆச்சரியம் தான்.
சுமார் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னால் நம் எல்லோரின் வீட்டிலும் பட்டுப் புடவைகளை தற்போது பராமரிப்பதை விட அதிகமாக பரமறித்திருப்போம். இன்னும் சொல்ல போனால் இன்று தயாரிக்கும் பட்டுப் புடவையை விட அன்றைய புடவைகள் இன்னும் பளிச்சென ஜோலிக்கும். ஏனென்றால் 1990 ஆம் ஆண்டு வரை சேலைகளில் வெள்ளி, தங்கம் கொண்ட நூல்களால் நெய்யப்பட்டன. அந்த சேலையில் தங்கத்தை பிரித்தெடுக்கும் முறை பல காலமாக நம் இந்தியாவில் சில இடங்களில் மிகவும் பிரபலமாக புழக்கத்தில் உள்ளது. ஆனால் அதுபோல நமக்கு தெரியாத முறைகளும் உள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் என்னும் இடத்தில் தான் தங்கம் சாக்கடையில் கிடைக்கும். தாஸ்மஹால் அருகில் இருக்கும் ஃபிரோசாபாத் கண்ணாடி வளையலுக்கு பிரபலமானவை. ஆனால், இந்த நகருக்கு மிகப்பெரிய வரலாறே உண்டு. டெல்லி சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக்கின் அரண்மனை நகரமாக இருந்த இவ்விடம் இன்று டெல்லியின் மறந்த போன நகரமாக மாறியது.
இன்று சுமார் 150 கண்ணாடி வளையல் தொழிற்சாலை கொண்ட ஃபிரோசாபாத் நகரின் பழைய பாரம்பரியம் ஒரு சில இடங்களில் தென்படுகிறது. முதலாம் உலகப்போர் காலத்தில் வளர்ச்சி பெற்ற கண்ணாடி தொழிற்சாலையில் இருந்து தங்கம் கிடைக்கிறது.
கண்ணாடி வளையல் செய்யும்போது ஒருவித ரசாயனங்கள் மூலம் தங்கமுலாம் பூசுவது தெரிய வந்தது. தங்கமுலாம் பூசும் செயல் இங்கு தொழிற்சாலையில் சாதாரணமாக நடந்தாலும், அது நமக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். வளையலுக்கு தங்கமுலாம் பூசிய பின் ரசாயணம், உடைந்த வளையல், பாலிஷ் செய்யப்படும் பயன்படுத்திய துணிகள் சாக்கடையில் கழிவாக அனுப்படுகிறது.
ஃபிரோசாபாத் நகரில் கண்ணாடி தொழிலில் ஈடுபடும் உள்ளூர் வாசிகள், இந்த சாக்கடை நீரில் இருக்கும் தங்கத் துகள்களை சேகரிப்பது வழக்கம். இதை சுத்தப்படுத்தி உலோகமாகப் பிரித்து எடுக்கின்றனர்.
இந்த முறை துல்லியமான முறை என்பதால் பெரும்பாலும் இது குப்பையாக மதிக்கப்படுகிறது. கழிவிலிருந்து பிரிக்கப்படும் உலோகத்தை மர எண்ணெய் கொண்ட வாளியில் சில மணி நேரம் ஊற வைக்கப்படுகிறது. இவ்வாறு உலோகம் ஊறும் வாளியில் தங்கத்தின் எச்சம் மேற்பகுதியில் மிதக்கும். இதை ஒரு துணியால் எடுத்து, அந்த துணியைக் காய வைக்கப்பட்டு சாம்பலாக எரிக்கப்படுகிறது.
இப்போது செய்யும் வழிமுறை தான் முக்கியமானதாகும். இந்த சாம்பலின் சில ரசாயனங்கள் சேர்த்த பின் தடிமனமாகிறது. பின்னர் இது திரவமாகும் வரை அடுப்பில் வைக்கின்றனர். திரவமாக மாறிய பின் ஒரு குவளையில் மாற்றி அதை குளிர வைத்தால் தங்கம் கீழ் மண் மேலே என பிரியும். தங்கத்தை கழிவில் இருந்து பிரிக்கும் இந்த முறையை கற்று தங்கத்தைத் தனியாகப் பிரிப்பது மிகவும் அரிதான முறை என்பதால் என்னவோ இந்த கலை மறைந்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…