Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Most Visited Tourist Place in Tamilnadu: சம்மர் லீவுக்கு ஜில்லுனு ஒரு டூர் போலாமா..? சீசன் ஆரம்பிச்சாச்சு...குறைந்த செலவில் சொர்க்கம்..

Nandhinipriya Ganeshan April 18, 2022 & 15:00 [IST]
Most Visited Tourist Place in Tamilnadu: சம்மர் லீவுக்கு ஜில்லுனு ஒரு டூர் போலாமா..? சீசன் ஆரம்பிச்சாச்சு...குறைந்த செலவில் சொர்க்கம்..Representative Image.

Most Visited Tourist Place in Tamilnadu: கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்க நேர்ந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள மலைப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், நான்கே நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கூடி இருந்தார்கள். இந்த நான்கு நாள் விடுமுறையை மிஸ் பண்ணவங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி தரும் வகையில், கோடை விடுமுறை வருது... எனவே, இந்த சம்மர் சீசனுக்கு டூர் போக பிளான் பண்ணிருப்பிங்க.. ஆனால் எந்த இடத்திற்கு செல்வது என்று தான் தெரியாது... இப்போது இந்த சம்மர் சீசனில் டூர் செல்ல வேண்டிய இடங்கள் (Hills Tourist Places in Tamilnadu) என்ன என்பதை பார்க்கலாம். 

கோத்தகிரி (Kotagiri)

இந்த சம்மர் சீசனில் எப்போதும் போன இடத்திற்கே போகாமல் புதிய மலைப் பகுதிகளுக்கு செல்லுங்கள். அந்த வகையில், நீலகிரியில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசமான கோத்தகிரியை ஊட்டி மற்றும் குன்னூர் ஆகிய மலைப் பிரதேசத்துடன் ஒப்பிடலாம். இது மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. அ ல்லது கோயமுத்தூர் மாவட்டத்திற்கு மேற்கேயுள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து சரியாக 35 கி.மீ. தொலைவில் உள்ளது.

இதன் அழகிய சூழல் மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் அதிகம் தான். இந்த அழகிய மலைப்பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1793 மீ உயரத்தில் உள்ளது. நமக்கு ட்ரெக்கிங் செல்வது மிகவும் பிடித்த ஒரு விஷயம். மலையேறும் போது அந்த மலையின் அழகு, இயற்கை காற்று, அடர்ந்த மலைகள், அமைதியான சூழல் அந்த அனுபவத்தை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற இடம் இது தான்.. கோத்தரிக்கு செல்ல பெஸ்ட் நேரம் (Best Time To Visit Kotagiri) என்று சொன்னால் பிப்ரவரி - மே மாதம் தான்.. ஒரு வேளை கோத்தகிரி போறதா இருந்தா, இந்த ஐந்து இடங்களுக்கு போக மறந்து விடாதீர்கள். கோத்தகிரியில் போக வேண்டிய 5 இடங்கள்:

 • கேத்தரின் நீர் வீழ்ச்சி
 • ரங்கசாமி தூண் மற்றும் சிகரம்
 • கொடநாடு வியூ பாயிண்ட்
 • லாங்க்வுட் ஷோலா
 • எல்க் அருவி

ஏலகிரி (Yelagiri)

சுற்றுலா அப்படின்னு சொன்னாலே லட்சக்கணக்கில் செலவு பண்ணி போறவங்களும் இருக்காங்க, ஆயிரக்கணக்கில் செலவு பண்ணி போறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வசதிக்கு ஏற்ற வகையில் ஒரு இடத்தை தேர்வு செய்து சுற்றுலா செல்கிறார்கள். அப்படி மிக குறைந்த செலவில் மகிழ்ச்சியோடு செல்லும் ஒரு சுற்றுலா தளம் தான் ஏலகிரி. பொதுவாக ஏலகிரி மலை “ஏழைகளின் ஊட்டி” என்றழைக்கப்படுகிறது.

3,645 அடி உயரத்தில் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் ஏலகிரி, தமிழ்நாட்டில் ஆராயப்படாத மலைகளில் ஒன்றாகும். இதமான வானிலை மற்றும் அமைதி போன்றவை ஏலகிரியின் இரண்டு முக்கிய அம்சங்களாக இருந்தாலும், அழகிய நிலப்பரப்புகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மூடுபனி மலைகள் ஆகியவை இயற்கை ஆர்வலர்களை பிரமிக்க வைக்கிறது. தமிழ்நாட்டின் வினோதமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான ஏலகிரி, பழமையான கிராமங்கள், பழத்தோட்டங்கள், பசுமையான வயல்வெளிகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் இணையற்ற இயற்கை அழகுடன் பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஏலகிரிக்கு செல்ல பெஸ்ட் நேரம் (Best Time To Visit Yelagiri) என்று சொன்னால் நவம்பர் - பிப்ரவரி மாதம் தான்.. ஆனால், தற்போது பெய்துள்ள மழைக் காரணமாக அங்கு சற்று ஈரப்பதமான சூழ்நிலை தான் நிழவுகிறது. எனவே, சம்மரில் நீங்க இந்த இடத்தும் செல்லலாம்..

வால்பாறை (Valparai)

கூகுளில் மலைப்பகுதி சொர்க்கம் என்று தேடினால் நமக்கு கிடைக்கும் இடம் கோயம்பத்தூரில் உள்ள வால்பாறை தான். சூரியனுக்கே சுவட்டர் போடவைக்கும் வால்பாறையின் குளிர் வானிலை. துள்ளி ஓடும் அருவிகள், அவற்றை சேகரிக்க பயன்படும் அணைகள், பசுமை மாறாத பள்ளத்தாக்குகள், எங்கு திரும்பி பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று இருக்கும் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் என சொர்க்கம் போல இருக்கிறது வால்பாறை. இது கோயம்புத்தூர் பொள்ளாச்சியிலிருந்து 60km தூரத்தில் உள்ளது, இதில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் காணப்படுகிறது. வால்பாறைக்கு செல்வதற்கு சென் போஸ்டில் அனுமதி பெற வேண்டும்.  

ஏற்காடு (Yercaud) 

சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது ஏற்காடு. கடல் மட்டத்தில் இருந்து 1515 மீ உயரத்தில் அமைந்துள்ளது. பசுமை போர்த்திய மலைகள்... மலை முகடுகளை தொட்டுச் செல்லும் மேகங்கள்... வானுயர்ந்த மரங்கள்... அமைதி பள்ளத்தாக்குகள் என, இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு, தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஏற்காடுக்கு செல்ல பெஸ்ட் நேரம் (Best Time To Visit Yercaud) என்று சொன்னால் மார்ச் - ஜூன் மாதம் தான்.. ஏற்காட்டில் நீங்க கண்டிப்பாக செல்ல வேண்டிய சுற்றுலா இடங்கள்:

 • ரோஜா தோட்டம்
 • சேர்வராயன் கோயில்
 • அண்ணா பூங்கா
 • எமரால்டு ஏரி
 • கிளியூர் நீர்வீழ்ச்சி
 • லேடீஸ் சீட்

கொடைக்கானல் (Kodaikanal)

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஒரு அழகிய சுற்றுலாத் தளம் கொடைக்கானல்.. சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் இம்மலைப் பகுதியை "மலைகளின் இளவரசி" என்றும் சொல்வார்கள். கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ள கொடைக்கானலைச் சுற்றி, பரப்பர் மற்றும் குண்டர் பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. கொடைக்கானலுக்கு செல்ல சிறந்த நேரம் (Best Time to Visit Kodaikanal) என்று சொன்னால் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையும், பின் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை. இம்மலைக்கு கிழக்கு திசையில் புகழ்பெற்ற பழனி மலை அமைந்துள்ளது. ஜூனிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பச்சை பசுமையாய் காட்சி அளிப்பதால் அப்போதும் கொடைக்கானல் சென்று மகிழலாம். கொடைக்கானலில் நீங்க கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்:

 • குணா குகை
 • வெள்ளி நீர்வீழ்ச்சி
 • டால்பின் நோஸ் பாறை
 • கோக்கர்ஸ் வாக்
 • பியர் ஷோலா நீர்வீழ்ச்சி
 • பிரையண்ட் பூங்கா
 • கொடைக்கானல் ஏரி
 • பேரிஜம் ஏரி 
 • தற்கொலை முனை

ஊட்டி (Ooty)

சம்மர் சீசன் டூர்னு சொன்னாலே முதலில் நமக்கு நினைவுக்கு (Famous Tourist Places in Tamilnadu) வருவது ஊட்டி தான். உதகமண்டலம் என்றும் அழைக்கப்படும் ஊட்டி 'மலைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது. இது நீலகிரியில் கடல் மட்டத்திலிருந்து 7440 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கை மற்றும் மலை ஆர்வலர்கள் அனைவருக்கும், இந்த அமைதியான மற்றும் அழகான மலைவாசஸ்தலத்திற்கு பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் வேறு எதிலும் இல்லாத ஈர்ப்பைக் கொண்டுள்ளது. பசுமையான பள்ளத்தாக்குகள், அலை அலையான மலைகள், அழகான ஏரிகள் மற்றும் பரந்த காட்சிகளுடன், தமிழ்நாட்டின் சிறந்த தேனிலவு இடங்களின் பட்டியலில் ஊட்டி முதலிடத்தில் உள்ளது. ஊட்டி செல்ல பெஸ்ட் நேரம் (Best Time To Visit Ooty) என்று சொன்னால் ஏப்ரல் - ஜூன் மற்றும் செப்டம்பர் - நவம்பர் மாதம் தான்..சம்மர்க்கு பெஸ்ட்னா அது ஊட்டி தான் ஆனால் செலவு கொஞ்சம் ஆகும். ஊட்டியில் நீங்க சுற்றி பார்க்க வேண்டிய அழகிய சுற்றுலா இடங்கள்:

 • பைகாரா
 • தொட்டபெட்டா
 • அவிலஞ்சி
 • லேடி கானிங் சீட் 
 • கெய்ரன் ஹில்ஸ்
 • பொட்டானிக்கல் கார்டன்
 • கல்கட்டி அருவி
 • கெட்டி வேலி வியூ
 • வென்லாக் டவுன்ஸ்
 • லேக் பார்க் ஜாலி உலகம்
 • ரோஜா தோட்டம்
 • ஊட்டி மலை ரயில் பயணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்