Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

அறிவியலையும் மிஞ்சும் மர்மங்கள் நிறைந்த கோதினி கிராமம்.. | Mystery of Twin Village in Kerala tamil

Editorial Desk Updated:
அறிவியலையும் மிஞ்சும் மர்மங்கள் நிறைந்த கோதினி கிராமம்.. | Mystery of Twin Village in Kerala tamilRepresentative Image.

“கடவுளின் தேசம்” என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள கோதினி கிராமத்தில் ஏறத்தாழ 250 ஜோடி இரட்டையர்கள் உள்ளனர். இதன் பின் இருக்கும் மர்மம் தான் என்ன? இந்த கோதினி கிராமத்தின் வரவேற்பு பலகையில் “இறைவன் வரமாக அளித்துள்ள இரட்டையர் கிராமம்” (Welcome you to the God’s own twin Village, Kodinhi)  தங்களை அன்புடன் வரவேற்கிறது  என்று எழுதப்பட்டுள்ளது. சரித்திரம் என்பது பல மர்மங்களை தன்னிடம் கொண்டது. நம்மில் சிலர் இந்த சரித்திர கதையை கட்டு கதை என்று நம்புவதும் இல்லை.  சிலர், இதனை பெரிதாக ஏற்று கொள்பவரும் உண்டு. இதனை, பொய்கள் என்று முழுமையாக ஒதுக்கி விடவும் முடியாது. அப்படிப்பட்ட, ஒரு சரித்திர  கதையான கோதினி கிராமத்தின் கதையை பற்றி இப்போது பார்க்கலாம்.

கோதினி கிராமம் எங்கு உள்ளது?

கேரள மாநிலம், மல்லாபுரம் மாவட்டதில் அமைந்துள்ள கிராமம் தான் இந்த கோதினி கிராமம். அப்படி என்ன இந்த கிராமத்தில் இருக்கிறது என்று தானே கேட்கிறிர்கள்? ஆம், இந்த கிராமத்தின் சிறப்பே இங்கு பிறக்கும் இரட்டை குழந்தைகள் தான். ரொம்ப காலமாக இந்த கிராமத்தை பற்றி பேசினாலும் இதை பற்றிய எந்த ஒரு தகவலும் மீடியாவில் வெளிவரவில்லை.

கோதினியின் மர்மம்:

இந்த கோதினி கிராமத்தில் முஸ்லிம் மக்கள் தான் அதிக அளவில் வாழ்கின்றனர்.  இந்த கிராமம் ஒரு வழக்கமான கேரள கிராமத்தைப் போல தான் காட்சியளித்தாலும் இதன் பின் ஒரு மர்மம் இருக்கிறது. இங்கும் தென்னை மரங்கள், அரிசி வயல்கள் மற்றும் ஆங்காங்கே ஓடும் கால்வாய்கள் என்று அனைத்தும் இருப்பினும் இதன் பின் இருக்கும் மர்மம் என்னவென்று பார்த்தால் மிகவும் மாறுபட்டது.  இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் இரட்டையர்களாக தான் பிறக்கின்றனர். ஒரு குடும்பத்திற்கு குறைந்தது ஒரு இரட்டை குழந்தையாவது இருக்கும். இதனை, கேள்விப்பட்டவர்கள் சிலர் இதனை நம்பாமல் இங்கு வந்து இந்த இரட்டையர்களை பார்த்து செல்கின்றனர். இதை குறித்து ஆய்வாளர்கள் சிலர் இங்கு பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வியப்பில் ஆழ்த்தும் இரட்டையர்கள்:

கோதினி கிராமத்தில் நாம் நடந்து சென்றால் நமக்கு எதிர் புறமாக வருபவர் நம்மை பார்த்து சிரித்தாள் நாமும் அவர்களை பார்த்து சிரித்துவிட்டு செல்வோம். சிறிது தூரம் சென்றவுடன் அதே நபர் நம் எதிரில் வந்து சிரிப்பார். நமக்கு அது மிக ஆச்சர்யமாக இருக்கும். ஆம், அவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர்களை போல நம்மால் இங்கு ஏராளமான இரட்டையர்களை இந்த கோதினி கிராமத்தில் நம்மால் காண முடியும்.

உலகின் நிலவரம் படி 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் நான்கு பேர் மட்டுமே இரட்டையர்களாய் பிறப்பார்கள். இந்தியாவில் 1000ல் ஒன்பது குழந்தைகள் தான் இரட்டையர்கள். ஆனால், இந்த கோதினியில் தான் 1000ல் 45 பேர் இரட்டையர்களாய் பிறக்கின்றனர்.

இரட்டையர்களின் எண்ணிக்கை:

கோதினி கிராமத்தில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு ஒரு செயல்பாடு தருகிறார். அதில், ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒரு தலைப்பில் ஒரு கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அதனால், மாணவன் ஒருவன் அந்த பள்ளியில் எத்தனை இரட்டையர்கள் உள்ளனர் என்று ஆய்வு செய்கின்றான். அந்த பள்ளியில் 25 ஜோடி இரட்டையர்கள் இருப்பதாக தெரிய வந்தது. இந்த செய்தி அந்த கோதினி கிராமத்தில் பரவியது. பிறகு தான் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் உணர்ந்தனர் அங்கு பிறக்கும் குழந்தைகள் இரட்டையர்களாய் பிறக்கின்றனர் என்று. இது சிறிது காலத்தில் அங்கு அதிகமாக பேசும் ஒரு தலைப்பு ஆகிவிட்டது. இதனை அடுத்து அங்கு ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் எத்தனை இரட்டையர்கள் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 280 ஜோடி இரட்டையர்கள்  இருப்பதாக தெரியவந்தது.  

கிராம மக்களின் கருத்து:

இந்த கணக்குகளுக்கு பிறகு கோதினி கிராம மக்களுக்கு இடையே ஒரு கருத்து தோன்றியது. அவர்கள், “இந்த கிராமத்திற்கு ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதனால் தான் இந்த கிராமத்தில் அதிகமாக இரட்டையர் உள்ளதாகவும் நம்புகின்றனர்.” இதற்கு எடுத்துக்காட்டாக, இந்த கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவருடைய குடும்பத்தில் யாரும் இரட்டையர்கள் இல்லை. ஆனால், அவர் மகள் திருமணம் செய்து கட்டாருக்குச் செல்ல, அங்கு அவளுக்கு பிறந்த குழந்தைகள் இரட்டையர்களாய் பிறந்தது. இதனை கண்ட அவள் தந்தைக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த கிராமத்தில் தற்போது 2000 குடும்பங்கள் வசிக்கின்றனர் ஆனால், அதில் 400 இரட்டையர்கள் இருக்கின்றனர்.

உலகில் இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகள்:

தெற்கு வியட்நாமில் உள்ள ஹூங் ஹியப்றோம் (Hung Hiepfrom) என்ற பகுதியிலும், நைஜீரியாவில் உள்ள இக்போ ஓரா (Igbo-Ora) என்ற பகுதியிலும், பிரேசிலில் உள்ள காண்டிடோ கோடாய் (Candido  Godoi) என்ற பகுதியிலும் அதிக அளவில்  இரட்டையர்கள் பிறந்து உள்ளனர். இதன், அறிவியல் பின்னணியை ஒரு குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட ஆய்வுகளுக்கு பிறகு பெண்களுக்கு அதிகமாக இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் உள்ளூரில் விளையும் ஒருவகை கிழங்கு வகை தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கோதினி கிராமத்திற்கான ஆராய்ச்சி :

2016 ஆம் ஆண்டு  ஹைதராபாத் அறிவியல் மையம், லண்டன் மற்றும் ஜெர்மனி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்கள் ஒரு குழுவை அமைத்து கோதினி மர்மத்திற்கான விடையை கண்டுப்பிடிக்க முயன்றனர்.  இதற்காக, இவர்கள் கோதினி கிராமத்தின் இரட்டையர்களின்  எச்சிலை சேகரித்தது அதனை DNA சோதனைக்கு அனுப்பினர். இதன் காரணம், அவர்களின் பரம்பரை தான் என்று பொதுவாக கூறப்பட்டாலும், அந்த கிராமத்தில் உள்ள காற்று அல்லது தண்ணீர் போன்ற ஏதோ ஒன்று தான் காரணம் என்ற எண்ணம் ஆழமாக பரவியது. ஆனால், அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு, இவர்கள் ஏதாவது குறையோடு உள்ளார்களா என்றும், அவர்களின் தாயின் உடலில் ஏதாவது உடற்கூறு மாறுபாடு இருக்கிறதா என்றும் ஆராயப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இல்லை. இவர்கள் சாப்பிடும் உணவு முறையில் எதாவது இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அப்படி ஏதும் இருந்தால் உலகமெங்கும் இருக்கும் குழந்தை இல்லாதவர்களுக்கு இது பெரும் வரமாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்