Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

இந்தப் புத்தாண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்ற, இந்த இடம் தான் பெஸ்ட்!| New Year Celebration Places in Tamilnadu

Gowthami Subramani Updated:
இந்தப் புத்தாண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்ற, இந்த இடம் தான் பெஸ்ட்!| New Year Celebration Places in TamilnaduRepresentative Image.

புத்தாண்டில், புது ஆடைகளை உடுத்தி இனிப்புகளை பரிமாறி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்வர். அதே போல, இந்த புத்தாண்டை வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக மாற்றுவதற்கு, பல்வேறு இடங்களுக்குக் குடும்பங்களுடன் சென்று, மகிழ்ச்சியான தருணத்தைச் சேகரித்து வைப்பதும் ஆகும். அதன் படி, நம் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட வேண்டிய சிறந்த இடங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்தப் புத்தாண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்ற, இந்த இடம் தான் பெஸ்ட்!| New Year Celebration Places in TamilnaduRepresentative Image

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கும் சென்னை, புத்தாண்டு கொண்டாடுவதற்கு சிறந்த இடமாகும். ஆண்டுதோறும் சென்னையில் என்றும் இல்லாத அளவிற்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். அதன் படி, சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முழுவதுமே பிரகாசமாக மாறி விடும். அதனைத் தொடர்ந்து, காலையில் கடற்கரையில் தோன்றும் சூரிய உதயம் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். மேலும், சென்னையில் இரவு முழுவதும் விடுதிகள், பார்கள் அனைத்தும் திறந்தே இருக்கும். இரவு முழுவதும் விருந்து தொடர்ந்து நடக்கும். குறிப்பாக, தென்னிந்தியாவில் சிறந்த புத்தாண்டு விருந்துகளில் ஒன்றாக சென்னை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் புத்தாண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்ற, இந்த இடம் தான் பெஸ்ட்!| New Year Celebration Places in TamilnaduRepresentative Image

ஊட்டி

எந்தவொரு சத்தம், போக்குவரத்து நெரிசல் போன்றவை இல்லாமல் புத்தாண்டை கொண்டாட விரும்பும் நபர்களுக்கு ஊட்டி ஒரு சிறந்த இடம் ஆகும். மேலும், தருணத்தை விரும்பும் மக்களுக்கு இந்த இடம் சிறப்பான இடமாகும். இது தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சமீபத்தில் உதக மண்டலம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள அமைதியான ஏரிகள்,  ஜில்லென்ற காற்று, பூக்கள் மலர்ந்து மனதில் இன்பம் தரும் நிகழ்வு போன்றவை இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த 2023 புத்தாண்டை ஜில்லென கொண்டாட விரும்புபவர்கள் ஊட்டியைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்தப் புத்தாண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்ற, இந்த இடம் தான் பெஸ்ட்!| New Year Celebration Places in TamilnaduRepresentative Image

கொடைக்கானல்

ஜில்லென குளிர்ச்சியாகக் கொண்டாட விரும்பும் நபர்களுக்கு, ஊட்டிக்கும் அடுத்த இடம் என்றால், அது கொடைக்கானல் தான். தமிழ்நாட்டின் கவர்ச்சியான மலைவாசஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள பசுமையான காடுகள், உயர்ந்த சிகரங்கள், நீர் வீழ்ச்சிகள் புத்தாண்டு கொண்டாடுவதற்கு ஏற்ற இடமாகும். புத்தாண்டு விடுமுறையின் போது, உங்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாட சிறந்த இடம் கொடைக்கானல் ஆகும்.

இந்தப் புத்தாண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்ற, இந்த இடம் தான் பெஸ்ட்!| New Year Celebration Places in TamilnaduRepresentative Image

மதுரை

அற்புதமான வரலாறு படைத்த இடமாகவும், ஆன்மீகம் நிறைந்த இடமாகவும் அமையும் மதுரையும், புத்தாண்டு கொண்டாடுவதற்கு ஏற்ற இடமாகும். இங்கு வீற்றிருக்கும் மீனாட்சியம்மனை வழிபட்டு, ஆன்மீக ரீதியாக புத்தாண்டை நன்முறையில் வரவேற்கலாம். இங்கு வாய்க்கு ருசியான உணவுப் பொருள்களும் வழங்கப்படுகின்றன. ஒரு முறை, இரு முறை அல்ல. எத்தனை முறை மதுரைக்குச் சென்று வந்தாலும் சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் போகும் எண்ணம் தோன்றும். இந்த புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு உங்களுக்கு மதுரை சிறப்பான இடமாகும்.

இந்தப் புத்தாண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்ற, இந்த இடம் தான் பெஸ்ட்!| New Year Celebration Places in TamilnaduRepresentative Image

கன்னியாக்குமரி

புத்தாண்டு நாளில், பல்வேறு சிறப்பு மிக்க வரலாற்று படைத்த இடங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு கன்னியாக்குமரி சிறந்த இடமாகும். இங்கு உள்ள குமரி அம்மன் கோவில், விவேகானந்தா பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், கன்னியாக்குமரி கடற்கரை, போன்றவை புத்தாண்டில் சிறப்பான அனுபவங்களைத் தரும். ஒரே நாளில் இது போன்ற சுற்றுலா இடங்கள் மனதிற்கு நிம்மதி அளிப்பவையாகவும், சிறப்பான அனுபவத்தைத் தரக்கூடியவையாகவும், மறக்க முடியாத நினைவுகளைத் தரக்கூடியவையாகவும் அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்