Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

ooty toy train: குளு குளு பயணம் தொடங்கியது! மீண்டும் இயங்கும் ஊட்டி மலை ரயில்!

Udhayakumar December 22, 2021 & 11:04 [IST]
ooty toy train: குளு குளு பயணம் தொடங்கியது! மீண்டும் இயங்கும் ஊட்டி மலை ரயில்!Representative Image.

இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது ஊட்டி மலை ரயில்.  சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில்,  மேட்டுப்பாளையத்திலிருந்து மலைப் பாதையில் குளுகுளு பயணத்தை அளிக்கும் ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  

கடந்த மாதம் தமிழகத்தில் பல இடங்களிலும் பெருவாரியாக மழை பெய்தது. இதனால் தமிழகமே தண்ணீர் தத்தளித்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்தது என்றே சொல்லலாம். 

இதற்கிடையில், ஒரு மாதம் வரை பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்தின் கல்லாறு- அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு மலை ரெயில் செல்லும் பாதையில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக மாறின.

இதைத்தொடர்ந்து, இந்த பாதையை சரி செய்ய சில வாரங்கள் ஆகும் என்ற நிலையில், தண்டவாளங்களும் சேதமடைந்ததால், மலை ரெயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது. சீரமைப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக நடந்த நிலையில், பணிகள் முழுவதுமாக நிறைவுற்றுள்ளது. 

இதையடுத்து,  பாதை சீரமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவு பெற்று மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் மலை ரயிலுக்காக காத்திருந்து குளு குளு பயணத்தை அனுபவிக்கின்றனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்