ஜனவரி 26, 2023 அன்று நாம் 74வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளோம். அன்று நம் நாட்டை பெருமிதம் செய்யும் வண்ணம் நாட்டின் முப்படைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து தங்கள் மரியாதையை செலுத்துவார்கள். அதை பார்க்கும் அனைவருக்கே ஒரு இனம் புரியாத சந்தோசம், கர்வம் மற்றும் மெய்சிலிர்ப்பு ஏற்படும். இவை நடைபெறும் இடமானது டெல்லியில் அமைந்துள்ள இந்தியா கேட் இடத்தில் கர்தவ்ய பாதையில் நடைபெறும். நம் தேசத்தை கௌரவிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பு கோலாகலமாக நடைபெறும் இடத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியா கேட் என்பதற்கு முன்னர் அகில இந்திய போர் நினைவுச்சின்னம் என்று அழைக்கப்பட்டது. இது நியூ டெல்லியின் சம்பிரதாய அச்சின் (ceremonial axis) கிழக்கு விளிம்பில் ராஜ்பாத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு போர் நினைவுச்சின்னமாகும். கடந்த வருடத்தில் ராஜ்பாதை என்பதை பிரதமர் கர்தவ்ய பாதை என்று பெயர் மாற்றினார். ஆனால் ராஜ்பாதை என்பதற்கு முன்பு அதனை கடமை பாதை அழைத்தனர். இது எதற்காக கட்டப்பட்டது என்றால், முதல் உலகப் போர் மற்றும் மூன்றாம் ஆங்கிலோ-ஆப்கான் போர் நடந்த காலத்தில் (1914 - 1921) இறந்த பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் 84,000 வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது.
இந்த தனித்துவமான நினைவு சின்னத்தை சர் எட்வின் லுட்யென்ஸால் வடிவமைத்துள்ளார். அந்த காலத்தில் இவர் நியூ டெல்லியின் முன்னணி மற்றும் முக்கிய ட்டிடக் கலைஞர் மட்டுமல்ல, இம்பீரியல் வார் கிரேவ்ஸ் கமிஷனின் உறுப்பினர் மற்றும் போர் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களின் ஐரோப்பாவின் முன்னணி வடிவமைப்பாளர்களில் ஒருவரும் ஆவார். அவர் ஐரோப்பாவில் மட்டும் மொத்தம் அறுபத்தாறு போர் நினைவுச்சின்னங்களை வடிவமைத்துள்ளார்.
அது மட்டும் இல்லது, லண்டனில் 1919ல் முதலாம் உலகப் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட முதல் தேசிய போர் நினைவுச்சின்னம் முதல் இகவும் மதிப்பிடும் கல்லறை வரை இவரால் வடிவமைக்கப்பட்டது.
"ஆர்க் டி ட்ரையம்பின் ஆக்கப்பூர்வமான மறுவேலை" என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்தியா கேட் 30 அடி (9.1 மீ) நீளம் கொண்டு கட்டப்பட்டது. கர்தவ்யா பாதை, மத்திய விஸ்டா, முக்கிய சடங்குகல் மற்றும் புது டெல்லியில் நடைபெறும் ஊர்வல பாதையில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 42-மீட்டர் (138 அடி) உயரம் கொண்ட இந்தியா கேட் சிவப்பு பரத்பூர் கல்லின் அடித்தளத்தைக் கொண்டு நிற்கிறது. அங்குள்ள மெமோரியல்-கேட் அறுகோண வளாகம், சுமார் 625 மீட்டர் (2,051 அடி) விட்டம் கொண்டது. அதாவது தோராயமாக 306,000 மீ2 (3,290,000 சதுர அடி) பரப்பளவைக் கொண்டுள்ளது.
அல்லது அழியாத சிப்பாயின் சுடர் எனப்படுவது கருப்பு பளிங்கு பீடம் கொண்ட ஒரு அமைப்பாகும். அதன் மீது துப்பாக்கி ஒன்று தலைகீழாக நிறுவப்பட்டுள்ளது மற்றும் போர் ஹெல்மெட் மூலம் மூடப்பட்டிருக்கும். மேலும் அங்கிருக்கும் நான்கு கலசங்களில் ஒவ்வொன்றிலும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு தீப்பிழம்புகளிலிருந்து நிரந்தர ஒளி அமைக்கப்பட்டிருக்கும். இது 1971 ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதனை இந்தியாவின் இருபத்தி மூன்றாவது குடியரசு தினத்தன்று (ஜனவரி 26, 1972) பிரதமர் இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.
இப்படி அங்கு அமைந்துள்ள ஒவ்வொரு கல்லறைக்கு ஒரு வரலாறு, நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களின் நினைவுகள் உள்ளது. கூடுதலாக, சிறந்த தலைவர்களின் சிலைகள் என்று நிறைய உள்ளது. இந்த குடியரசு திணத்திலாவது நாம் டெல்லி சென்று இவற்றை பார்த்து மகிழ்வோமாக.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…