உலகளவில் பல்வேறு இடங்களில் காணப்படும் அதிசயங்கள் ஏராளம். அந்த வகையில் உலகத்திலேயே தேயிலை விளையக் கூடிய மிக உயரமான இடமாக விளங்குவது கொழுக்குமலை ஆகும். எல்லா காலத்திலும், அதாவது ஆண்டு முழுவதும் குளிர்ந்தே காணப்படும் மலைகளின் பட்டியலில் இந்த கொழுக்கு மலையும் இடம் பெற்றுள்ளது. இது போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கொழுக்குமலையின் பசுமையான பயணத்தை இங்குக் காணலாம்.
நமது தமிழகத்தில் ஆங்காங்கே நிறைய மலைத் தொடர்கள் உள்ளன. அவை காண்பதற்கு வியத்தகு சுற்றுலா செல்லும் இடங்களாகவும் உள்ளது. தமிழகத்தில், உள்ள பல்வேறு மலைத் தொடர் இடங்களைக் கண்டிப்போம். ஆனால், இந்த மலைத் தொடர் தான், உயரமான மலைச் சாலையாகக் கருதப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த கொழுக்குமலைத் தேயிலைத் தோட்டங்கள் மலையை ஆக்கிரமித்த வண்ணம், குளிர்ந்த மேகக் கூட்டத்தோடு காணப்படுவது காண்போரின் கண்களுக்குக் குளிர்ச்சி அளிப்பது போலத் தோன்றும்.
பூப்பாறை இடத்தில் காணப்படும் பரந்த தேயிலை மலைத் தோட்டம். இதனைக் கடந்து செல்லும் போது, காணப்படும் பெரிய காடு, சிறிய காடு. இந்தப் பகுதிக்கு அருகே பரந்து இருக்கும் அணை இரங்கல் அணை. தேயிலை மலைகளின் காலடியில் வளைந்து செல்லக் கூடிய காதிற்கு இனமான ஒலியைத் தரும் நீண்ட நீர்த்தேக்க அணை. இதனைத் தொடர்ந்து, அடுத்து ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் இருப்பது சூரியநெல்லி. கொழுக்குமலைக்குச் செல்லக் கூடிய சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக நுழைவு வாயிலாக அமைவதே சூரியநெல்லி ஆகும்.
எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த தேயிலை தோட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக அமைவது உலகளவில் புகழ்பெற்றதைக் குறிப்பிடும். இயற்கை முறைப்படி தயாராகக் கூடிய தேயிலை உற்பத்திக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தேயிலைத் தொழிற்சாலைகளுக்குச் சென்று அதனைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளும் பெறுவர். ஆண்டு முழுவதுமே, இதன் காலநிலை குளிர்பிரதேசமாகக் காணப்படுவதால் தேயிலை உற்பத்தியானது தொடர்ந்து நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மலைப் பிரதேசங்கள் குளிர் பிரதேசமாகவே காணப்படும். ஆண்டு முழுவதும் ஒரே காலநிலையில் காணப்படும் இந்த கொழுக்குமலையில், ஜில்லென்ற சூழ்நிலையே நிகழும். இங்கு நிலவும் குளிர்ச்சியானது வெயிலை மறைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு இன்பத்தைத் தரக் கூடியதாக அமையும். இந்தப் பகுதிக்குப் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுடன், அவர்களுக்கு சிறந்த ஒரு மெமரியையும் அளிக்கிறது.
தமிழக மற்றும் கேரள மாநிலத்திற்கு இடையே உள்ள, இரு எல்லைகளையும் இணைத்தவாறு அமையும் இடமாக கொழுக்குமலை உள்ளது. இது ஷூட்டிங் ஸ்பாட்டாகவே உள்ளது. மலையாள சினிமாக்கள் பெரும்பாலும், இந்த இடத்தில் எடுக்கப்பட்டவையாகவே அமையும். தமிழில் மைனா படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படம் முழுவதுமே இந்த கொழுக்குமலையில் எடுக்கப்பட்டது தான். இந்தப் பகுதியானது இரு வேறு மாநில எல்லைப் பகுதியாக இருப்பதால், இரண்டு மாநிலங்களிலிருந்துமே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தருவர்.
இந்த இடமானது வருடம் முழுவதுமே குளிர்ப் பிரதேசமாக இருப்பதால், கோடைக்காலம், குளிர் காலம் இரண்டு காலங்களிலுமே கொழுக்குமலை அனைவரும் பயணிக்கும் இடமாக சிறந்த இடமாக விளங்குகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…