Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Rishikesh Tour and Travel in Tamil: சம்மர்ல கூலா ஒரு டூர்… அதுவும் இந்த இடத்துக்கு போங்க…! லைஃப் லாங் மறக்க மாட்டீங்க…!

Gowthami Subramani April 29, 2022 & 18:15 [IST]
Rishikesh Tour and Travel in Tamil: சம்மர்ல கூலா ஒரு டூர்… அதுவும் இந்த இடத்துக்கு போங்க…! லைஃப் லாங் மறக்க மாட்டீங்க…!Representative Image.

Rishikesh Tour and Travel in Tamil: இந்தியா முழுவதும் எண்ணிலடங்கா இடங்கள், எண்ணற்ற அதிசயங்கள், அழகான மனதை மயக்கும் இடங்கள் ஏராளம் உள்ளன. அதுவும் கோடை காலம் வந்தால் போதும், எந்த இடத்திற்குச் சென்றால் நன்றாக இருக்கும் என்று தான் யோசிப்பார்கள். கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலை எத்தனை பேர் தாங்கிக் கொள்வார்கள். இந்த சமயத்தில் தான் அனைவரும் கோடைகால பயணமாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று மகிழ்வர். அதிலும் முக்கியமாக, மக்கள் அனைவரும் ஜில்லென்று இருக்கும் இடங்களுக்குச் செல்ல மகிழ்வர்.

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுவது தான் ரிஷிகேஷ். இந்தப் பகுதியில் கோடை காலம் என்றாலே திருவிழாவாகக் காணப்படும்.

ரிஷிகேஷ் சிறப்பு

இந்தப் பகுதி யோகா மற்றும் தியானத்தின் உலகத் தலைநகர் எனப் போற்றப்படுவது ஆகும்.

இதில் ஆண்டு முழுவதும் ஓர் இனிமையான வானிலையுடன் இருக்கக் கூடிய ஒரு புனித நகரம் ஆகும்.

இந்தப் பகுதி உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பிடித்த இடமாகும். இது ஒப்பிட முடியாத வெள்ளை நீர் ராஃப்டிங் மற்றும் பல்வேறு சாகச விளையாட்டுகள் நிறைந்த இடமாகும் (Rishikesh Tour and Travel in Tamil).

ஏன் ரிஷிகேஷ்

ரிஷிகேஷ் பகுதி, இமயமலையின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இந்த பகுதி வழியாக கங்கை நதி பெருக்கெடுத்துக் காணப்படுகிறது. மேலும், இத்தகைய பழங்கால நகரம் வட இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளமாக உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் மக்கள் யாத்திரைக்குச் செல்வர். இந்தப் பகுதி உலகின் யோகா தலைநகரம் எனப் போற்றப்படுகிறது. ஏனென்றால், இந்தப் பகுதி யோகா மற்றும் தியானம் கற்பதற்குச் சிறந்த இடமாகும். இதனால், இங்கு யோக மற்றும் தியானம் கற்க வரும் பார்வையாளர்கள் ஏராளம் உள்ளனர்.

ரிஷிகேஷ் பெயர்க்கான காரணம்

மாபெரும் தொன்மையான இந்த இடத்தில் ஏராளமான ஆசிரமங்கள் உள்ளன. இவை அனைத்தும் சர்வதேச அளவில் யோகா மற்றும் இந்தியாவின் பிற பண்டைய ஆரோக்கிய மரபுகளின் மையங்காக உள்ளன. ஆண்டுதோறும் சர்வதேச யோகா திருவிழா உத்தரகாண்ட் சுற்றுலா வளர்ச்சி வாரியத்தால் நடைபெற்று வருகிறது.

இத்திருவிழா, ஆயிரக்கணக்கானோரை யோகா ஆர்வலர்களாக மாற்றுகிறது. இந்தப் பகுதியுடன் தொடர்புடைய பல்வேறு புராணக்கதைகள் உள்ளன. அதாவது பழம்பெரும் இதிகாசமாக விளங்கக் கூடிய ராமாயணத்தில் ரிஷிகேஷ் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. அதாவது, ராமாயணத்தில் ராவணனை அழித்த ராமர் தனது சகோதரர்களுடன் இந்த இடத்திற்குத் தான் தவம் செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது.

வினோத கஃபே

ரிஷிகேஷ் பகுதி ஒரு விநோதமான கஃபேக்களின் நகரம் என அழைக்கபப்டுகிறது. இந்தப் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் நிரம்பிக் காணப்படுவர். எனவே, இந்த கஃபே உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச உணவு வகைகளையும் வழங்குகிறது. ஹோலி பண்டிகை, இந்தப் பகுதியில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

கண்டிப்பாக செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்

ஆன்மீகத்திற்கு உயர்ந்த மதிப்புகளை அள்ளிக் கொடுத்து, புனித கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள ஓர் இடமாகக் கருதப்படுகிறது. இங்கு புனிதத்துவத்தைக் கலைக்கும் வகையில், இறைச்சி அல்லது மதுபானம் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

ஆன்மீக உயர்வு

A picture containing tree, outdoor, water, nature

Description automatically generated

ஆன்மீக முக்கியத்துவத்தை அறிந்து அதனை முதன்மையாக வைத்துக் கொள்ளும் இடமாக அமைவது ரிஷிகேஷ். இங்குள்ள பல யோகா ஆசிரமங்கள், தியானம் செய்வதற்காக அமைக்கப்பட்டவை. இந்த சிறப்பான பகுதியில் பல்வேறு ஆயுர்வேத மையங்கள் உள்ளன. அங்கு நாம் உடல் மற்றும் மனதுக்கான பழங்கால சிகிச்சை முறைகளைப் பெற்றுக் கொள்ளலாம் (Rishikesh Tour and Travel).

கோவிலுக்கு வருகை தருதல்

A statue of a person

Description automatically generated with medium confidence

இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ரிஷிகேஷ், ஆன்மீகத் தக்கவையாக உள்ளன. இதனால், இந்தப் பகுதியில் ஏராளக்கணக்கான ஆன்மீகக் கோவில்கள் நிறைந்துள்ளன. ரிஷிகேஷின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் மலை உச்சியில் உள்ள நீலகண்ட மகாதேவனின் கோவில் சிறப்பு வாய்ந்த கோவிலாகக் கருதப்படுகிறது.

புனித நீராடுதல்

A group of people around a fire

Description automatically generated with medium confidence

புனித நீரில் மூழ்கினால், நாம் செய்வ பாவ வினைகள் அனைத்தும் நீங்கும் என நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அவ்வாறு இருக்கும் கோவில்களில் ஒன்று ரிஷிகேஷில உள்ள கோவில். இங்கு கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று புனித நதிகளும் கூடும் இடம் திரிவேணி என அழைக்கப்படும். இந்த இடத்தில் தான் பக்தர்கள் புனித நீராடுவர். இந்தப் பகுதியில் நீராடினால், அனைத்து பாவங்களும் விலகி நன்மை உண்டாகும் என்று கூறுவர்.

த்ரில் ஆஃப் அட்வென்ச்சர்

A picture containing sky, outdoor

Description automatically generated

இந்தப் பகுதியில் பல்வேறு வகையான விளையாட்டுகள் உள்ளன. ஒயிட் வாட்டர் Rafting மற்றும் Bungee Jumping போன்றவை ரசிக்க வேண்டிய விளையாட்டுகள். ரிஷிகேஷ் பகுதிக்கு செல்பவர்கள் ராஃப்டிங்கில் விளையாடாத திரும்ப மாட்டார்கள். ராஃப்டிங்கிற்கான சிறந்த காலம் செப்டம்பர் முதல் நவம்பர் அல்லது மார்ச் முதல் மே ஆகும்.

மேலும், அந்தப் பகுதியில் ராக் க்ளைம்பிங், ராய்பெல்லிங், அல்லது கிளிஃப் ஜம்பிங் போன்ற விளையாட்டுகள் உள்ளன. இது போன்ற விளையாட்டிற்கு கலந்து கொள்ள நினைப்பவரின் உடல் மற்றும் மன வலிமை மற்றும் இன்னும் சில அடிப்படைத் திறன்களைக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வர் (Rishikesh Haridwar Tour).

ரிஷிகேஷ் ஷாப்பிங்

A picture containing marketplace, colorful, fruit, produce

Description automatically generated

ஆண்டு முழுவதும் ஏராளக்கணக்கான பயணிகளை ஈர்க்கும் நகரம் என்பதால், இந்த பகுதியில் உள்ள ஏராளமான கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுள், UP கைத்தறி, காதி கடை, மற்றும் கர்வால் கம்பளி போன்ற ஏராளமான துணி வகைகளும் நியாய விலையின் அடிப்படையில் விற்கப்படுகின்றன. இது நமக்கு ஓர் நினைவாக விளங்கக் கூடியதாக அமையும். அந்த பகுதியில் விற்கும், முத்துகள் மற்றும் மணிப் பொருள்களையும் வாங்கினால் நமக்கு நினைவு கூறும் வகையில் இருப்பவையாக அமையும்.

இது போன்ற சுற்றுலாத் தளங்களுக்கு கோடை காலத்தில் சென்றால் சூப்பராக இருக்கும். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளும் சென்று மகிழ்வர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்