Sun ,Jun 11, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

கேரளத்தின் டாப் 10 சுற்றுலாத் தளங்கள் இவைதான்!

Udhayakumar December 04, 2021
கேரளத்தின் டாப் 10 சுற்றுலாத் தளங்கள் இவைதான்!Representative Image.

சுற்றுலா என்றாலே நம் எல்லாருக்கும் அலாதி பிரியம்தான். அட இருக்கும் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் தூக்கி தூற எறிஞ்சிட்டு சிவனேனு சுற்றுலா போனா மனசு அமையாவும், ரிலாக்ஸாவும் இருக்கும் இல்லியா?

பிக்னிக் போகணும்.. ரொம்ப தூரம் போக முடியாது. இடங்கள் நல்லாவும் இருக்கணும். அப்படி இடங்கள் இருக்கா? கண்டிப்பா இருக்கு. இதோ நீங்கள் கட்டாயம் காண வேண்டிய கேரளாவின் டாப் 10 சுற்றுலாத் தளங்கள்

 

10 ஆலப்புழா

கடவுளும் ஓர வஞ்சனை செய்கிறாரோ அத்தனை அழகையும் கேரளத்துக்கே கொடுத்துவிடுகிறார் என்றே இளைஞர்கள் பொறாமை கொள்கிறார்கள். அப்படி பொறமை கொள்ள முக்கிய காரணமான ஒன்று ஆலப்புழா

இந்தியாவின் வெனிஸ் என அழைக்கப்படும் பூலோக சொர்க்கம் ஆலப்புழா

உப்பு நீர் ஏரிகளில் படகுப் பயணம் மேற்கொள்வது அலாதியானது

படகு இல்லங்களில் வசிப்பது, பயணிப்பது,  புகைப்படங்கள் எடுப்பது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்

 

காணவேண்டிய இடங்கள்

ஆலப்புழா கடற்கரை

கிருஷ்ணாபுரம் மாளிகை

மராரி கடற்கரை

புன்னமாடா ஏரி

பத்திரமணல் தீவு

அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில்

பாம்புபடகு போட்டி

 

பயணிக்க சிறந்த நேரம்

ஆகஸ்ட் முதல் பிப்ரவரி முடிய இருக்கும் காலம் 

 

எப்படி அடைவது

அருகிலுள்ள விமான நிலையம் - கொச்சி விமான நிலையம்

அருகிலுள்ள ரயில் நிலையம் - ஆலப்புழா ரயில் நிலையம்

 

9 மூணாறு

கடவுளின் சொந்த மாநிலம் என்கிற சொல்லுக்கு சாட்சியாக நிற்பது இந்த மூணாறு பகுதி. 

உலகிலேயே மிக அழகிய பகுதி எது என என்னைக் கேட்டால் மறுக்காமல் சொல்வேன் அது மூணாறு என்று. 

கடல் மட்டத்திலிருந்து 1600 மீ உயரத்தில் அமைந்துள்ளது. 

முத்திரைப்புழா, குண்டலா, நல்லத்தண்ணி ஆறு ஆகியவற்றின் இயற்கை கொடையோடு இந்த மலை எப்போதும் பசுமையாக காட்சி தருகிறது. 

ஹனிமூனுக்கு செல்ல சிறந்த இடம் இந்த மூணாறு. ரொமேண்டிக் ப்ளேஸ் ஆஃப் கேரளா.

டிரெக்கிங், சைக்கிளிங், மலை பைக்ரைடு உள்ளிட்டவைகளுக்கு சிறந்த இடம்

 

காண வேண்டிய இடங்கள்

இரவிகுளம் தேசிய பூங்கா

மட்டுப்பெட்டி அணை

ஆனைமுடி சிகரம்

தேயிலை அருங்காட்சியகம்

ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி

சீயப்பாறை நீர்வீழ்ச்சி

டாப் ஹில்ஸ்

குண்டலா ஏரி

 

பயணிக்க சிறந்த நேரம்

வருடத்தின் எல்லா நாட்களும் இனிமையான கால சூழல் நிலவுகிறது

 

எப்படி பயணிப்பது

ரயில் - ஆலுவா ரயில் நிலையம்

விமானம் - கொச்சி விமான நிலையம்

 

8 குமரகம்

உப்பு நீர் ஏரியில் படகு பயணம் செய்துகொண்டே நம் வாழ்வின் அழகான நிகழ்வுகளை மனதில் அசை போட சிறந்த இடம்

 

காண வேண்டியவை

குமரகம் கடற்கரை

குமரகம் பறவைகள் சரணாலயம்

வேம்பநாடு ஏரி

அருவிக்குழி நீர்வீழ்ச்சி

பே ஐலான்ட் அருங்காட்சியகம்

பத்திரமணல் தீவு

 

சிறந்த நேரம்

ஆகஸ்ட் முதல் பிப்ரவரி முடிய உள்ள மாதங்கள்


 

7 கொச்சி

கேட் வே ஆஃப் கேரளா என்பார்கள் அதாவது கேரளத்தின் நுழைவு வாயில். அரபிக் கடலின் கேரள நுழைவு வாயில்தான் இந்த கொச்சி. 

 

காண வேண்டியவை

வைபீன் தீவு

கொச்சி கோட்டை

அரபிக் கடல் மெரைன் டிரைவ்

வல்லர்பாடம் தேவாலயம்

கேரள வரலாற்று அருங்காட்சியகம்

மங்களவானம் பறவைகள் சரணாலயம்

 

சிறந்த நேரம்

ஆகஸ்ட் முதல் பிப்ரவரி முடிய

 

எப்படி அடைவது

விமான நிலையம் - கொச்சி

ரயில் நிலையம் - எர்ணாகுளம்




 

6 வயநாடு

அழகிய பசுமையான காடுகள் நிறைந்த பகுதி வயநாடு. 

மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்க சிறந்த பகுதி

மேகம் நிறைந்த சாலையில் பைக் ரைடு, இடிமுழங்கும் நீர்வீழ்ச்சிகள், மறைந்து வளர்ந்த காடுகள் என சிறப்பானதாக இருக்கும்

 

காணவேண்டியவை

வயநாடு காட்டுயிர் வாழ்க்கை

செம்பரா சிகரம்

இதய வடிவ ஏரி

மீன்முட்டி நீர்வீழ்ச்சி

எடக்கல் குகைகள்

பானசுரா சாகர் அணை

மரவீடுகள்

 

சிறந்த நேரம்

அக்டோபர் முதல் மே வரை

விமான நிலையம் - கோழிக்கோடு

ரயில் நிலையம் - கோழிக்கோடு



 

5 வாகமண்

1200 அடி உயரத்திலிருந்து அழகிய உலகைக் காண வாகமணுக்கு வாருங்கள்

வெகேசனுக்கென்றே எழுதி கொடுக்கப்பட்ட ஒரு பர்ஃபெக்ட் இடம் வாகமண். 

பைன் காடுகள்,  கற்பாறை மலைகள், நீர்வீழ்ச்சிகள் நிறைந்த சொர்க்கம் இந்த வாகமண். 

 

காணவேண்டியவை

ஹில்டவுன்

வாகமண் பைன் காடுகள்

குரிசுமலை

மீனாச்சில் ஆறு

மரமலை நீர்வீழ்ச்சி

வாகமண் ஏரி

இடுக்கி அணை

பட்டுமடை சர்ச்

 

சிறந்த நேரம்

வருடம் முழுக்க எப்போதுவேண்டுமானாலும் பயணிக்கலாம்

 

எப்படி அடைவது

விமான நிலையம் - கொச்சி

ரயில் - குட்டிக்கானம்

 

4 தேக்கடி

மேற்கு தொடர்ச்சி மலையில் வளமையைக் கண்கூட காண நீங்கள் செல்லவேண்டிய இடம் தேக்கடி. 

கேரளத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. 

பெரியார் தேசிய பூங்கா இங்குள்ளது

 

காணவேண்டியவை

காட்டுயிர் வாழ்க்கை

யானை சவாரி

காட்டு உலா

தேக்கடி நறுமணப் பொருள்கள் தோட்டம்

சூழலுக்குகந்த ரிசார்ட்டுகள்

 

சிறந்த நேரம்

வருடத்தின் எல்லா நாட்களும் பயணிக்க சிறந்த இடம் இது

 

எப்படி செல்வது

விமான நிலையம் - கொச்சி

ரயில் நிலையம் - கோட்டயம்

 

3 வர்க்கலா

இந்தியாவின் சிறந்த கடற்கரை சுற்றுலாத் தளங்களுள் ஒன்று

கண்டிப்பாக காண வேண்டிய சூப்பரான கடற்கரை மற்றும் சுற்றுலாப் பகுதி

 

காணவேண்டியவை

ஹாட் ஸ்பிரிங்

பாபநாசம் கடற்கரை

ஆயுர்வேதா பீச்

கடல்உணவு ஹோட்டல்கள்

சிவகிரி மட்

லைட் ஹவுஸ்

 

சிறந்த நேரம்

அக்டோபர் முதல் பிப்ரவரி முடிய நாட்கள்

 

எப்படி அடைவது

விமான நிலையம் - திருவனந்தபுரம்

ரயில் நிலையம் - வர்க்கலா 


 

2 திருவனந்தபுரம்

தென்னிந்திய மாநிலங்களுக்கென தனித்தனி கலாச்சாரங்கள் உள்ளன. அப்படி கேரள கலாச்சாரத்திற்கென ஒரு தலைநகர் இருக்குமென்றால் அது திருவனந்தபுரம்

 

காணவேண்டிய இடங்கள்

பத்மநாபசுவாமி கோவில்

புத்த மாளிகை

நேப்பியர் அருங்காட்சியகம்

வரலாற்று அருங்காட்சியகம்

ஆட்டுக்கல் கோவில்

கௌடியர் மாளிகை

வெள்ளையாணி ஏரி

பால்குளங்கரை தேவி கோவில்

வேலி ஏரி

கடற்கரை

 

சிறந்த நேரம்

செப்டம்பர் முதல் மார்ச் முடிய

 

எப்படி செல்வது

ரயில் மற்றும் விமான நிலையம் உள்ளது

 

1 கோவளம்

கோவா செல்ல நேரம் இல்லையா? கோவளம் செல்லுங்கள். சென்னைக்கு அருகிலுள்ள கோவளம் அல்ல. கேரளத்தின் கடைகோடி கடற்கரைதான் இந்த கோவளம்

திருவனந்தபுரத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது இந்த கடற்கரை

 

செய்யவேணடியவை

லைட்ஹவுஸ்

ஹவா பீச்

சமுத்ரா பீச்

காரமணி ஆறு

வெள்ளையாணி ஏரி

விழிஞ்சம் கிராமம்

 

சிறந்த நேரம்

ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை

 

எப்படி அடைவது

திருவனந்தபுரம் ரயில் மற்றும் விமான நிலையம் அருகிலேயே உள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்