Sun ,Jun 11, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

Top 10 Facts About Russia: ரஷ்யா பற்றிய சூப்பரான தகவல்கள்! அடேங்கப்பா!

Nandhinipriya Ganeshan February 26, 2022 & 14:00 [IST]
Top 10 Facts About Russia: ரஷ்யா பற்றிய சூப்பரான தகவல்கள்! அடேங்கப்பா!Representative Image.

Top 10 Facts About Russia: ரஷ்யா என்பது ஒரு பெரிய நாடு, அங்கு நூற்றுக்கணக்கான நகரங்கள் உள்ளன. ஒரு சில நகரங்கள் சூடான மற்றும் குளிர்ந்த நகரங்களாகவும், உலர்ந்த மற்றும் மழை நகரங்களாகவும், சில நகரங்கள் பெரிய மற்றும் சிறிய நகரங்களாகவும் இருக்கின்றன. ரஷ்யாவில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு நாடுகளின் மக்கள் வாழ்கின்றனர். இது ரஷ்யாவை மிகவும் பன்முக கலாச்சார மாநிலமாக மாற்றுகிறது.

இப்போது ரஷ்ய நகரங்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை தெரிந்துக் கொள்வோம்! 

 

 

Interesting Facts About Russia:

ரஷ்யாவில் 1,100 க்கும் மேற்பட்ட நகரங்கள் உள்ளன. இது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளை விட அதிகமாம். அடேங்கப்பா! அப்போ எவ்வளவு பெரிய நகரமாக இருக்கும் யோசித்து பாருங்கள்.

ரஷ்யாவில் உள்ள 37 நகரங்களில் 500,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றார்களாம்.

சீனா, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக 1 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரங்களின் எண்ணிக்கையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

ஆர்க்டிக் வட்டத்திற்கு பிறகு உலகின் மிகப்பெரிய நகரம் மர்மன்ஸ்க் (Murmansk)ஆகும்.

 

 

சோவியத் ஒன்றிய காலத்தில் ரஷ்யாவில் உள்ள 12 நகரங்களுக்கு ஹீரோ சிட்டி என்ற பெயர் வழங்கப்பட்டது.

ரஷ்யா 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 15 நகரங்களை கொண்டுள்ளன.

"ரஷ்யாவின் கோல்டன் ரிங்" சுற்றுலா பாதையில் மட்டும் 9 வரலாற்று நகரங்கள் உள்ளன. இது ரஷ்யர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.

துலா ஒப்லாஸ்டில் (துலா மாகாணம்) அமைந்துள்ள செக்கலின் நகரம், 1,000க்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட ரஷ்யாவின் மிகச் சிறிய நகரமாக இருக்கிறது.

 

 

ரஷ்யாவில் மிகவும் ஆபத்தான நகரங்களென்று சொன்னால், கைசில், ஷக்தி, பெர்ம், சிட்டா மற்றும் வோல்கோகிராட் ஆகியவை உள்ளன.

அதேபோல் க்ரோஸ்னி, சோச்சி, நிஸ்னேவர்டோவ்ஸ்க், அனபா, மற்றும் கெலெண்ட்ஜிக் ஆகியவை ரஷ்ய நகரங்களில் மிகவும் பாதுகாப்பானவை.

மற்ற ரஷ்ய நகரங்களை விட மாஸ்கோவிற்கு அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மற்ற நாடுகளில் இருந்து 20 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.            

மாஸ்கோ ரஷ்யாவில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அங்கு சுமார் 13 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்