சத்தீஸ்கர் மாநிலத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ராகுல்(11) 100 மணி நேர முயற்சிக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாங்கிரி சம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் கடந்த 10ஆம் தேதி அப்பகுதியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து உடனடியாக தகவலறிந்து மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை இறங்கியது . ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டு, ராகுலின் உடல்நிலையை கண்காணித்து வந்தனர். சிறுவன் சுயநினைவுடன் இருந்த நிலையில் குழாய் வழியாக ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் சுரங்கம் அருகே பள்ளம் தோண்டிய மீட்பு படையினர், 100 மணி நேர முயற்சிக்கு பின் உயிருடன் சிறுவனை மீட்டனர். இதனையடுத்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…