பிறந்து பதினோரு மாதங்களே ஆன கன்னியாகுமாரியைச் சேர்ந்த குழந்தையோ ஒன்று உலக சாதனை படைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் பாகோடு அருகே உள்ள தேனாம்பாறை எனும் பகுதியை சேர்ந்த பெறில் ஹெர்மன்-பியான்ஷா தம்பதிகளின் 11 மாத குழந்தை அற்றி ஹெர்மன் ஆவார்.
வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பெயரை பெற்றோர்கள் கூற, அற்றி ஹெர்மன் அதில் 233 பொருட்களை சரியாக கண்டு எடுத்து வேல்டு ரெக்கார்ட் புக் ஆப் லண்டன் , இண்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்ட் , கலாம் வேல்டு ரெக்காட்ஸ், மேஜிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என பல சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.
சாதனை குழந்தை அற்றி ஹெர்மனின் சாதனையை பாராட்டி கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி சென்னையில் கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் தந்தை கேரளாவின் எர்ணாகுளம் அப்பல்லோ டயர்சில் வேலை பார்த்து வருகின்றார். பெற்றோர் இருவரும் தான் குழந்தையின் பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர்.
மேலும் பல சாதனைகள் படைக்கும் வகையில் இந்த குழந்தைக்கு அடுத்ததாக 195 நாடுகளின் கொடியையும் காட்டினால் எது எந்த நாட்டின் கொடி என சொல்லி கொடுக்க பயிற்சி நடந்து வருகிறது. வெறும் 11 மாதங்களே ஆன குழந்தை பல்வேறு உலக சாதனைகளை படைத்து வரும் நிலையில், பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…