குவைத் குடும்பங்களுக்கு அடிமையாக இருந்து வீட்டு வேலை செய்ய 10 லட்சம் ரூபாஉக்கு விற்கப்பட்ட 3 கேரள பெண்களை குவைத் நாட்டில் இருக்கும் மலையாளின் நல அமைப்பு தலையிட்டு மீட்டுள்ளது.
கேரளாவை பூர்விகமாக கொண்ட்டு துபாயில் வசித்து வரும் கஸ்ஸாலி என்பவர், பெண்களை விடுவிக்க வேண்டும் என்றால் பல லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து மூன்று பெண்களில் ஒரு கணவன் குவைத்தில் உள்ள மலையாளி நல அமைப்பு வீடியோ மூலம் மனைவி படும் இன்னல்களை கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் தலையீட்டு பெண்களை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய பெண்ணின் கணவர் ஒருவர், விசா உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தங்களே ஏற்றுக்கொள்வதாகவும், மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாக கூறி ஏமாற்றி கொண்டு சென்றதாகவும் அங்கே சென்று சில நாட்கள் கழித்து தான் அவர்கள் விற்கப்பட்டதாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…