அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மீதான கடுமையான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா விவாதித்து வரும் நிலையில், சனிக்கிழமை சிகாகோவில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, இதில் ஐந்து பேர் பலியாகியுள்ளதாகவும், 16 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தெற்கு அல்பானியின் சனிக்கிழமை நள்ளிரவு 12:19 மணியளவில் 37 வயதுடைய பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலையே அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளுக்கு பாடம் எடுக்கும் அமெரிக்காவுக்கு யார் தான் பாடம் எடுக்க போகிறார்களோ...
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…