சென்னைக்கு கடத்திய 517 கிராம் தங்கம், மின்னணு சாதனங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து இன்று காலை சென்னை வந்த விமானப் பயணிகளை சுங்கத் துறையினர், விமான நிலையத்தில் சோதனையிட்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது காசிம் என்பவரிடமிருந்து, ரூ.24 லட்சம் மதிப்புள்ள, 517 கிராம் கடத்தல் தங்கம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, முகமது காசிமை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…