உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் இன்று தனியார் பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.
பேருந்து தௌர்ஹாராவிலிருந்து லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை எண் 730 இல் உள்ள அய்ரா பாலத்தில் எதிர் திசையில் இருந்து வந்த மினி டிரக் மீது மோதி இந்த விபத்து நடந்துள்ளது. 8 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பஸ்சை கேஸ் கட்டர் மூலம் வெட்டி காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…