சிதம்பரம் பேருந்து நிழற்குடையில் கல்லூரி மாணவன் ஒருவன் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை ஆதாரமாக வைத்து பாலாஜி கணேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில், கல்லூரி மாணவன் ஒருவன் பள்ளி மாணவிக்கு பள்ளி சீருடையிலேயே தாலி கட்டும் வீடியோ வைரலானது. இந்த விவகாரத்தில் முகநூல் பக்கத்தில் வீடியோவை வெளியிட்ட பாலாஜி கணேஷன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மாணவ, மாணவியின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரம் பற்றி அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரான ரம்யா அவர்களின் தலைமையில் மாணவ, மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மூன்று நாள்கள் கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மாணவனைக் கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதற்கிடையில், வீடியோவை வெளியிட்டு கைது செய்யப்பட்ட பாலாஜி கணேஷன் தற்போது உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…