சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து கொள்ள இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள சட்ட உதவி மைய வளாகத்திற்கு முன் வந்த நபர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த காவல் துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இருப்பினும், அவருக்கு 80% சதவீத அளவில் உடலில் தீக்காயம் ஏற்பட்டு, உடல் கருகிய நிலையில் இருந்தார். இந்த ஆபத்தான நிலையில், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், அவரது ஊர், பெயர் குறித்த விவரங்களைக் காவல் துறையினர் கேட்டுக் கொண்டிருந்தனர். இது அங்கு இருந்தோரை அதிர்ச்சியடையச் செய்தது.
இது குறித்து வெளிவந்த தகவலின் அடிப்படையில், தீக்குளித்த நபர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்று தெரிய வந்தது. இவர் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததைக் கண்டித்து தீக்குளித்ததும் தெரிய வந்தது.
இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…