Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

யாரு சாமி நீ.. ஹெல்மெட் போட்டு தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் இளைஞர்..

Nandhinipriya Ganeshan October 11, 2022 & 11:05 [IST]
யாரு சாமி நீ.. ஹெல்மெட் போட்டு தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் இளைஞர்..Representative Image.

தலைக்கவசம் உயிர்கவசம்! போலீசார் நம் மக்களை இருசக்கர வாகனத்தில் போகும்போது ஹெல்மெட்டை போட சொல்வதற்கு காரணம் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும்போது தலையில் எவ்வித பாதிப்பும் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே. ஆனால், நம்மில் பலரும் அதை காதில் கூட போட்டுக்கொள்வதில்லை. இதனால் போலீசார் ஹெல்மெட் போடாதவர்களை சாலையில் நிறுத்தி அவ்வப்போது அபராதம் வசூலிப்பதும் வழக்கம். 

நம்மில் பலரும் அபராதம்கூட கட்டுவேன், ஆனால் ஹெல்மெட் போடமாட்டேன் என்று வீம்பிற்கு நிற்போம். ஆனால், ஒரு இளைஞர் போலீசாரின் அபராதத்திற்கு பயந்து தலையில் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பனை செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காய்கறி விற்கும் இளைஞர் தலையில் ஹெல்மெட் அணிந்த படி சாலையில் சென்றதை பார்த்து போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வண்டியில் செல்லும்போது ஹெல்மெட் போடாமல் சென்றால் போலீஸ் அபராதம் வசூலிக்கும் என்ற பயம் காரணமாக ஹெல்மெட் போட்டு செல்வதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ அனைவரது முகத்திலும் சிரிப்பை வரவழைத்தாலும், அவருடைய கடமை பாராட்டத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்