ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், லேசான அறிகுறிகள் இருந்ததால் நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்த போது கொரோனா பாசிட்டிவ் என வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் படி, தன்னை தனிமை படுத்திகொண்டுள்ள ஜெயம் ரவி, உரிய சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தன்னுடன் நேரடி தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ள நிலையில், தற்போது கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் அவர் நடித்து முடித்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…