Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

அரசு கல்லூரி விடுதியில் அதிர்ச்சி.. 50 மாணவிகள் வாந்தி மயக்கம்!!

Sekar October 13, 2022 & 10:54 [IST]
அரசு கல்லூரி விடுதியில் அதிர்ச்சி.. 50 மாணவிகள் வாந்தி மயக்கம்!!Representative Image.

அரசு கல்லூரி மருத்துவமனையின் நர்சிங் பயிற்சி பள்ளி ஹாஸ்டலில் இரவு உணவு சாப்பிட்ட 50 மாணவிகள் மயக்கம் அடைந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இயங்கி வரும் நர்சிங் பயிற்சி பள்ளியில், 287 மாணவிகள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு, நேற்று முன்தினம் இரவு கல் தோசையுடன் சாம்பாரும் வழங்கப்பட்ட நிலையில், உணவருந்திய மாணவிகளில் 50 பேர் வாந்தி எடுத்து மயங்கினர். 

இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 30 பேர் சிகிச்சை முடிந்து விடுதிக்கு திரும்பிய நிலையில், 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, பயிற்சி மாணவிகள் உணவருந்திய சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது குறித்து மருத்துவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் விஸ்வநாதன் இது குறித்து கூறுகையில், உணவு கூடத்தை ஆய்வு செய்து, சுகாதாரமாக பராமரிக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்