இந்தியாவில் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நேற்று (ஜூன் 2) தொடங்கிய 2 நாள் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில் “மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு தரமான கல்வி எளிமையாக, சுலபமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தேசிய அளவில், 'பிஎம்ஸ்ரீ பள்ளிகள்' துவக்கப்படும். இவை, எதிர்காலத்துக்கான குடிமகனாக நம் மாணவர்களை உருவாக்கும் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர்; புதிய தேசிய கல்விக்கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனன்றும், இந்தியாவில் தமிழ், குஜராத்தி, பெங்காலி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். எதுவும் இந்தியை விட தாழ்ந்ததல்ல. பாடத்திட்ட கட்டமைப்பில் அனைத்து மாநிலங்களும் பங்கேற்க வேண்டும் என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…