Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

ஆஸ்கர் வென்ற பிரபல நடிகை திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!!

Sekar October 14, 2022 & 13:13 [IST]
ஆஸ்கர் வென்ற பிரபல நடிகை திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!!Representative Image.

ஆஸ்கர் விருது வென்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி நேற்று முன்தினம் காலமானார். 

இரவு தூங்கச் சென்ற அவர் காலையில் கண்விழிக்காத நிலையில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. அவருக்கு வயது 97. 

1970களில் ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான நடிகையாக இருந்த இவர் 60க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் 1984 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மர்டர் ஷி ரைட் என்ற தொடரில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். 

ஆறு கோல்டன் குளோப், ஐந்து டோனி விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கார் விருதையும் இவர் பெற்றுள்ளார். இவரின் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்