Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

Sekar September 30, 2022 & 13:53 [IST]
கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!Representative Image.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் நாளை முதல் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

அக்டோபர் 4 ஆம் தேதி ஆயுத பூஜையும், அக்டோபர் 5 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இதில், அக்டோபர் 3 ஆம் தேதி விடுமுறைக்கு பதிலாக அக்டோபர் 8 ஆம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்