நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்ச்சூழல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து வருகிறது. இதனை தடை செய்ய வேண்டும் என அவ்வப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை:-
1-சிகரெட் பேக்ஸ்
2- பிளேட்கள், கப்கள், கிளாஸ்கள், ஃபோர்க்ஸ் , ஸ்பூன்கள், கத்திகள், ட்ரேக்கள் உள்ளிட்ட கட்லரி பொருட்கள்
3-பிளாஸ்டிக் ஸ்டிக்ஸ் கொண்ட இயர்பட்ஸ்
4-ஸ்வீட் பாக்ஸ்களில் சுற்றப்படும் பிளாஸ்டிக் வ்ரேப்பர்
5-கேன்டி மற்றும் ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ்
6-இன்விடேஷன் கார்ட்ஸ்
7- அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன்
8-100 மைக்ரானுக்கு கீழான PVC பேனர்ஸ்
9- ஸ்ட்ராக்கள்
10- ஸ்டிர்ரர் (கிளறிகள்)உள்ளிட்டவைக்கு தடை வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…