Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

காசு பணம் துட்டு மணி மணி.. 78 நாள் போனஸ் ஊதியம்.. அரசு அதிரடி!!

Sekar September 29, 2022 & 12:56 [IST]
காசு பணம் துட்டு மணி மணி.. 78 நாள் போனஸ் ஊதியம்.. அரசு அதிரடி!!Representative Image.

தசராவுக்கு முன்னதாக, 2021-22 ஆம் ஆண்டிற்கான ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் உற்பத்தி-சார்ந்த போனஸ் (PLB) திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நடவடிக்கையால் சுமார் 11 லட்சம் நான் கெஜட்டேட் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இது இந்திய ரயில்வேக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். 

இது தவிர, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) நான்கு சதவீத உயர்வுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

தசரா மற்றும் பூஜை பண்டிகைகளுக்கு முன்னதாக போனஸ் அறிவிக்கப்படுவது வழக்கம். தகுதியுள்ள கெஜட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியக் கணக்கீட்டு உச்சவரம்பு மாதாந்திர ரூ.7,000 ஆகும். இதன் மூலம் தகுதியான ரயில்வே ஊழியர்கள் அதிகபட்சமாக 78 நாட்களுக்கு ரூ.17,951 போனஸாக பெறுவர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்