பிரபல சிமெண்ட் நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள் அதிர்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் செயற்கையாக கட்டுமான பொருள்களின் விலை உயர்த்தப்பட்டதாக கட்டுமான தொழிலாளர்கல் சங்கத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். அதன்படி, ஊரடங்கிற்கு முன் ஒரு மூட்டை சிமெண்ட் சிமெண்ட் ரூபாய் 370 ஆக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக 52ஒ ரூபாயாக சிமெண்ட் நிறுவனங்கள் உயர்த்தியது. இந்நிலையில் தற்போது பிரபல சிமெண்ட் நிறுவனமான ராம்கோ சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20-25 வரை உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்த விலை உயர்வால் வீடு கட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…