சென்னையில் லாரியில் இருந்து டயர் கழன்று மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னையில் லாரியில் இருந்து டயர் கழன்று மோதியதில் 45 வயது நபர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், அந்த நபர் சாலையில் காத்திருந்து பைக்கிற்கு அருகில் இருந்த பாக்கெட்டை சரிபார்த்துக் கொண்டிருந்த போது லாரியில் இருந்து கழன்று உருண்டு வந்த டயர் அவர் மீது மோதியது. அதிவேகமாக டயர் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலையே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துரையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலர் இந்த விடீயோவை பதிவிட்டு நாட்டில் பாதுகாப்பற்ற சாலைகளை இது குறிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், நேற்றைய தினம் டெல்லியில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…